திருச்சி ஜெயில்
திருச்சி ஜெயில், எல்.எஸ்.கரையாளர், அழிசி, விலை:ரூ.170;
இரண்டுமுறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட எல்.எஸ்.கரையாளரின் சுதந்திரப் போராட்ட சிறை அனுபவங்களாக இந்த நூல் அமைந்து இருக்கிறது.
1940-ம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியதால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கு இருந்த ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், டாக்டர் சுப்பராயன் ஆகியோரின் சிறை அனுபவங்களையும் தெரிவித்து திருக்கிறார்.
சிறையில் அன்றாடம் என்ன நடக்கும்? சிறை மருத்துவமனை எப்படி இருக்கும் என்பதுபோன்ற தகவல்களையும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாற்றின் ஒரு பகுதியையும் இந்த நூல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
நன்றி: தினத்தந்தி, 13/2/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818