ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், அ. இராகவன், அழகு பதிப்பகம், விலைரூ.220, தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது.உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை வெளிநாட்டார் ஆய்வை எடுத்துக்காட்டி விளக்குகிறார். மட்பாண்டங்கள், மண்டை ஓடுகள், அரிய கருவிகள் பற்றி விரிவாக உணர்த்துகிறது. திராவிட நாகரிக வாழ்வில் பொன், இரும்பு ஆகியவை அணிகலன்ளாக வடிவமைத்து அணிந்ததை எடுத்துரைக்கிறது. பண்டைத் தமிழர் […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தான்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், விலை 220ரூ. தமிழர்களின் நாகரிகத் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் ஆதித்த நல்லூர் நாகரிக வரலாற்றை தமிழில் முதல் முறையாக விளக்கமாக ஆதித்தநல்லூரும் | எடுத்துக் கூறியவர் என்ற பெருமையைப் பெற்ற பொருநைவெளி நாகரிகமும் இந்த நூலின் ஆசிரியர், தமிழர்களின் ஆதிகால நாகரிகத் தன்மை குறித்து வியப்பான தகவல்களைத் தந்து இருக்கிறார். ஆதித்தநல்லுர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதையும், இரும்பை முதன் முதலாகக் கண் டுபிடித்தது தமிழர்களே என்பதையும் சான்றாதாரங்களுடன் தெரிவித்து இருக்கிறார். ஆதித்தநல் […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தன்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழர் நாகரிகத்தை எடுத்தியம்பும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த ஆய்வு நூல் இது. திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் பறம்பில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வே இந்தியாவின் முதல் அகழாய்வாகக் கருதப்படுகிறது. 1876- ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சாகோர், ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள், மனித எலும்புகள், மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவை பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தை […]

Read more