தமிழரின் சமயங்கள்

தமிழரின் சமயங்கள், அருணன், விகடன் பிரசுரம், விலைரூ.220 தமிழரின் மதங்கள் சாம்ராஜ்ஜிய காலங்களில் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் நுால். நாயக்கர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி காலம், நவீன காலம் என பகுப்பாய்வு செய்து, தமிழரின் சமயச் சார்பு பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். கிறிஸ்துவ மதம் தமிழர்களிடம் பரப்பப்பட்ட விதம், இஸ்லாமியர் மதம் பரப்ப முனைப்பு காட்டாததற்கான காரணம், நாட்டார் தெய்வ வழிபாடு பற்றிய விபரங்களும் அலசி ஆராயப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தில் உள்ள பெரும் பிரிவுகள், அவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றி […]

Read more

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!, ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.90 ஆணவக் கொலைகளை கொலை செய்ய, வாளை துாக்குவது போல் வந்துள்ள நாவல். நாவலை நடத்திச் செல்லும் போது, இந்தியாவில் நடந்த ஆணவக் கொலைகளை பட்டியல் இட்டு ரத்தக் கண்ணீர் வர வைக்கிறார். ஆணவக் கொலை செய்ய நினைக்கும் ஒருவரின் மனதை மாற்ற, பத்திரிகையாளர் முயற்சி எடுக்கிறார். ஆணவக் கொலை செய்து, துாக்குத் தண்டனைக்கு காத்திருக்கும் கைதியை சந்திக்க வைக்கிறார். அந்த கைதி ஆணவக் கொலையின் கேடுகளை விளக்க, மனம் மாறி இளம் ஜோடிக்கு […]

Read more

மாளவிகா ஐ.ஏ.எஸ்.

மாளவிகா ஐ.ஏ.எஸ்., சக்தி சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலைரூ.105 சமுதாயத்தில் நிலவும் முற்போக்கு கருத்துகளுக்கும், பழைய மதிப்பீடுகளுக்கும் நடக்கும் மோதல்களை சித்தரிக்கும் நாடகம். இதில் கதாபாத்திரங்களாக மாளவிகா, தாயுமானவர், சுகுணா மங்களம் மாமி என இடம் பெற்றுள்ளனர். காட்சிகளாக மாளவிகாவின் வீடு, ஆற்றங்கரை, மலை, காடு, கலெக்டர் பங்களா, பண்ணையார் பங்களா என்று பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஐ.ஏ.எஸ்., படித்து பணியில் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று போராடும் பெண்ணை பற்றிய கதை. மிகவும் சுவாரசியம் தருகிறது. – வி.விஷ்வா நன்றி: […]

Read more

இந்திர விழா

இந்திர விழா, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.130. இந்திரனுக்கு எடுக்கும் விழா பற்றி விவரிக்கும் நுால். இந்திரன் மழைக் கடவுள் என்றும், வேளாண் தொழிலுக்குத் தலைவன் என்றும் இலக்கிய ஆதாரங்களோடு நிறுவுகிறார். ஐந்து கட்டுரைகள் அழகு செய்கின்றன. இந்திர விழா என்பது பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளன. மழை வளம் பெருகவும், மன்னனின் ஆட்சி சிறக்கவும் விழா எடுப்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது கோவை பேரூரில் நடைபெறும் இந்திர விழா எனும் நாற்று நடவுத் திருவிழாவையும் […]

Read more

மதாம்

மதாம், டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.400. மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளேயின் மனைவி ழான் என்பவரைக் குறிக்கிறது. அவரது வரலாற்றையும், டியூப்ளேயின் வரலாற்றையும் புதுச்சேரியின் பேச்சு வழக்குடன் எடுத்துஉரைக்கிறது. பிரெஞ்சு சொற்கள் தமிழ் மயமாக்கப்பட்டு நாவலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை விளக்குவதற்காக நட்சத்திரக் குறியிட்டு பொருள் விளக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கவர்னராக டியூப்ளே, 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அந்த வரலாறு தான் நாவலாகியிருக்கிறது. கவர்னராக இருந்த அவரை குற்றவாளி […]

Read more

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!

வாங்க பாஸ், வாழ்க்கையை கொண்டாடலாம்!, எஸ்.வெங்கடேசன், விஜயா பதிப்பகம், விலைரூ.150. ‘இவ்வளவு பிரச்னைகளுடன் சந்தோஷமாக வாழும்போது, நீங்களும் சந்தோஷமாக வாழலாம் அல்லவா’ என கேட்கத் தோன்றும் அளவுக்கு அனுபவங்களில் இருந்து படைக்கப்பட்டுள்ள நுால். குடும்பம், கல்லுாரி காலம், பிரச்னையை எதிர்கொண்டது, அதில் இருந்து மீட்டது என உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். ‘கலகலப்பாக இருக்க முயலுங்கள்’ என துவங்கி, ‘வாழ்க்கையை காதலியுங்கள்’ என முடியும் 31 தலைப்புகள், வாழ்வியல் உண்மைகளை உணர்த்துகின்றன. பழமொழி, பேச்சு வழக்கு, திருக்குறள் பயன்படுத்திய எளிய மொழி நடை; […]

Read more

அகதியின் துயரம்

அகதியின் துயரம், பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.120 இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடு திரும்பவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். உலக அகதிகளின் நிலவரம், இந்திய நாடு எதிர்கொள்ளும் அகதி பிரச்னை, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் அகதிகள், மொழி சார்ந்த நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள போட்டி அரசியல் என பல கருத்துகளை அலசுகிறது. இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான […]

Read more

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

பாரதி பாடிய மணக்குள விநாயகர், சொ. சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய “விநாயகர் நான்மணி மாலை’ நூல் தெற்றென உணர்த்துகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்’, “தவமே புரியும் வகையறியேன்’, “அச்சமில்லை அமுங்குதலில்லை’ “நமக்குத் தொழில் கவிதை’, “பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்’, “அன்பிற் சிறந்த தவமில்லை’, “கவலைப் படுதலே கருநரகு’ போன்றவை […]

Read more

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள்

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள், கி.ஸ்ரீதரன், நாம் தமிழர் பதிப்பகம், பக்152, விலை ரூ.160. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றிய நூலாசிரியர், கல்வெட்டுகள், அரிய சிற்பங்கள், நினைவு கற்கள், மைல்கல், கோயில்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்று ஆதாரங்கள் கூறும் அரிய தகவல்களை இந்நூலின் மூலம் நமக்கு தொகுத்து அளித்துள்ளார். மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள வடுகபட்டி என்ற ஊரில் உதயசந்திரன் என்பவருடைய குடும்ப நிலத்தில் கிடைத்த கல்வெட்டு தொடர்பான தகவலுடன் தொடங்கும் இந்நூல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி […]

Read more

சிறகுகள் விரித்திடு

சிறகுகள் விரித்திடு (கவிதையும் கதையும்), அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200. ஒருவரின் ஆளுமை, அறிவாற்றலை மேம்படுத்துவதில் கதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோன்று சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் படிப்பவரின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எளிமையாகப் புனையப்பட்ட நூறு இனிய கதைகளையும், அதைச் சார்ந்த அர்த்தமுள்ள நூறு கதைகளையும் சுமந்து வந்திருக்கிறது “சிறகுகள் விரித்திடு’ நூல். இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் மற்றும் கவிதைகளும் நம்மை புதிய பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, “முடியும் என்றால் முடியும்’, […]

Read more
1 2 3 4 8