அன்னதானம்

அன்னதானம், இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர், இரா.கண்ணன், வெளியீடு: இரா.கண்ணன், பக்.644; விலை ரூ.1000. “தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பது முதுமொழி. அன்னமே உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. உயிர்களின் பலமும் ஒளியும் எப்போதும் அன்னத்தாலேயே வளர்ச்சி பெறுகின்றன. அன்னம் தண்ணீரால் உண்டாகிறது. இத்தண்ணீரால் உண்டான அன்னம் இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை. அதனால்தான் இவ்விரண்டின் பெருமைகளையும் பீஷ்மர் (மகாபாரதத்தில்) எடுத்துரைக்கிறார். “பசியுடன் இருப்பவர்க்கு அன்னம் பாலித்தால் இறைவன் இருமடங்கு அருளை வழங்குகின்றான்’ என்கிறது நமது வேதம். “பசிப்பிணியால் வாடுகின்ற அனைவரும் அன்னதானம் ஏற்பதற்குரிய தகுதி […]

Read more

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி, கு.அன்பழகன், காவ்யா, பக்.368, விலை ரூ.370. அடிமை இந்தியாவில், ஒற்றுமையின்றி பல்வேறு பாளையங்களாகச் சிதறிக்கிடந்த நெல்லைச் சீமையில், பூலித்தேவன் அரசாண்ட நெல்கட்டும் செவ்வல் மட்டுமே கப்பம் கட்டாமல் ஆங்கிலேயரை துணிவுடன் எதிர்த்தன. பூலித்தேவனின் படைக்குத் தலைமைத் தளபதியாக விளங்கியதோடு மட்டுமல்லாது, அவருக்கு வலது கரமாகவும் விளங்கிய வெண்ணிக் காலாடியின் வீர தீரத்தையும் அவர்தம் அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்றையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. சாதிய உணர்வுகள் தலைதூக்காமல், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்ணிக் காலாடியின் […]

Read more

நூறு புராணங்களின் வாசல்

நூறு புராணங்களின் வாசல், முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. நூலாசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதி வந்த குறுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மொத்தம் நூறு கதைகள் உள்ளன. ஃபிளாஷ் ஃபிக்ஷன் அல்லது மைக்ரோ ஃபிக்ஷன் என்று கூறப்படும் வகையைச் சார்ந்தவை. ஈசாப்பின் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள் போன்ற வடிவத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் யதார்த்தம் போன்ற அம்சங்களுடன் அதீத கற்பனையும் கலந்து தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 3333-ஆம் ஆண்டில் நவீன மனிதர்கள் தனி கிரகத்தில் […]

Read more

உலக நாட்டுப்புறக் கதைகள்

உலக நாட்டுப்புறக் கதைகள், ப்ரியா பாலு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.100. சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் அர்த்தங்கள், மேம்பாடு, சூழ்நிலையை சரியான முறையில் கையாளுதல், அறிவை மேம்படுத்துதல், நற்குணங்களை வெளிப்படுத்துதல் மற்றும் நகைச்சுவை போன்ற எல்லா கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக விளங்குகிறது. ஏழை, எளிய மக்களின் இன்ப, துன்பங்களையும், அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளையும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. – வி.விஷ்வா நன்றி: தினமலர், 7/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மகாகவியின் பாஞ்சாலி சபதம்

மகாகவியின் பாஞ்சாலி சபதம், கு.ஞானசம்பந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.45. மகாகவி பாரதி எழுதிய குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தை நாடக வடிவில் தரும் நுால். இந்திய விடுதலைப் போரில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த குறுங்காவியத்தைப் புனைந்தார் பாரதி. அதை, மாணவ – மாணவியர் நாடகமாக நடிக்க ஏற்ற வடிவில் உருவாக்கியுள்ளார். கல்லுாரியில் படித்த காலத்தில், அதை நாடகமாக நடித்தது பற்றிய சுவாரசிய அனுபவத்தையும் முன்னுரையில் பதிவு செய்துள்ளார். வாசிக்கவும், அரங்கில் நடிப்பதற்கும் ஏற்ற நுால். – ராம். நன்றி: தினமலர், 7/11/21. இந்தப் புத்தகத்தை […]

Read more

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர்

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர், முத்தாலங்குறிச்சி காமராசு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.260. மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்பவர்களை சித்தர்கள் என அழைக்கிறோம். சித்து என்றால் உயிர். சித்தர் என்றால் உயிர் உடைய ரகசியம் அறிந்தவர் என்று பொருள். ஆற்றல் பெற்றாரைச் சித்தி அடைந்தவர் என அழைப்பதுண்டு. மனத்துக்கண் மாசிலனாகி செயற்கரிய செயல்புரிபவர் சித்தர்கள். சித்தி எனும் சொல்லிற்குக் கைகூடல், முயற்சியில் வெற்றி என்பது பொருளாகும். ஐம்புலனை அடக்கும் சித்திகளில் […]

Read more

குட்டி இளவரசனின் குட்டிப் பூ

குட்டி இளவரசனின் குட்டிப் பூ, உதயசங்கர், வானம் வெளியீடு, விலை 100ரூ. பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் எக்சுபெரி எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘குட்டி இளவரசன்’. அந்த நாவலில் இடம்பெறும் குட்டி இளவரசன், அவன் நேசிக்கும் குட்டிப்பூ ஆகியோருடன் அந்த்வான் எக்சுபெரியும் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும் கதை இது. புகழ்பெற்ற இந்தக் கதாபாத்திரங்கள் இன்றைய பிரச்சினைகள் சிலவற்றின் ஊடாகச் சென்று திரும்பும் புது முயற்சியே இந்தக் கதை. இளையோர் நாவலாகச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 6/1/2022. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் (சமூக நாவல்), ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.65 குடிப்பழக்கத்தால் விளையும் கேடுகளை சித்தரிக்கும் நாவல். ‘தினமும் குடிப்பேன்; நீ தான் அடங்கிப் போகணும்’ என்கிற தோரணையில் அருணாவின் கணவன் வினோத் நடக்கிறான். அதனால் கணவனைப் பிரிகிறார்; ஆனால் நிலை குலைந்து விடவில்லை. மகளை வளர்த்து ஆளாக்குவதிலும், ஐ.ஏ.எஸ்., படிக்க வைத்து கலெக்டர் ஆக்குவதிலும் ஆத்ம திருப்தியும், ஆத்ம பலமும் கிடைக்கின்றன. கல்வித் திட்டத்தில் ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடத் திட்டம் வேண்டும் என்று மகளை வற்புறுத்துகிறார். சமூக சீர்திருத்த நாவல்! – […]

Read more

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி, குமார் ராஜேந்திரன், தாய் வெளியீடு, விலை குறிப்பிடப்படவில்லை. எம்.ஜி.ஆர்., பற்றி, ‘தாய்’ வார இதழில் அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரை தொகுத்து ஆக்கப்பட்ட நுால். 41 அத்தியாயங்களில் எம்.ஜி.ஆர்., குறித்த தகவல்களை, படங்களுடன் அழகாக தொகுத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு கிடைத்த ‘பாரத ரத்னா’ விருது வாங்கிய தருணம், இலங்கை, கண்டியில் நீதிபதியாகவும், ஆசிரியராகவும் எம்.ஜி.ஆரின் தந்தை பணிபுரிந்து, ஒரு தெருவுக்கே அவரது பெயரைச் சூட்டும் அளவிற்கு வாழ்ந்ததையும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர்., பற்றி அறிய உதவும் […]

Read more

பறவைகள்

பறவைகள், மாலினி அரவிந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. பத்து சிறுகதைகள், இரண்டு சிறுவர்கதைகள், ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். வார, மாத இதழ்களில் வெளிவந்து பரிசு பெற்றுவை. மனிதர்களின் பிரச்னைகள், மன அவலங்கள், சமூக குறைபாடுகள், உறவு முரண்பாடுகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகின்றன; மனதை உருக்குகின்றன. கனடா நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் இருந்தும், தமிழ் பெண்கள் ஆர்வமில்லாமல் இருப்பது பற்றி கட்டுரை வழியாக ஆதங்கப்படுகிறார். பெண் மனம், அவர்கள் உலகம் எப்படியானது என்பதை கூறும் நுால். – […]

Read more
1 2 3 4 5 8