எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி, குமார் ராஜேந்திரன், தாய் வெளியீடு, விலை குறிப்பிடப்படவில்லை. எம்.ஜி.ஆர்., பற்றி, ‘தாய்’ வார இதழில் அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரை தொகுத்து ஆக்கப்பட்ட நுால். 41 அத்தியாயங்களில் எம்.ஜி.ஆர்., குறித்த தகவல்களை, படங்களுடன் அழகாக தொகுத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு கிடைத்த ‘பாரத ரத்னா’ விருது வாங்கிய தருணம், இலங்கை, கண்டியில் நீதிபதியாகவும், ஆசிரியராகவும் எம்.ஜி.ஆரின் தந்தை பணிபுரிந்து, ஒரு தெருவுக்கே அவரது பெயரைச் சூட்டும் அளவிற்கு வாழ்ந்ததையும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர்., பற்றி அறிய உதவும் […]

Read more

எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்

எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்.,  ஜானகி எம்ஜிஆர்., தாய் வெளியீடு,   பக்.152,  விலை குறிப்பிடப்படவில்லை;  தாய் வார இதழில் எம்.ஜி.ஆர்.குறித்து அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரின் தொகுப்பே இந்நூல். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் குறித்து எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் எம்ஜிஆரின் மனைவி என்கிற முறையில் ஜானகி எழுதியுள்ளதால் உணர்வுபூர்வமாக மட்டுமல்லாது பல்வேறு அரிய தகவல்கள், புகைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கர்நாடக இசையை திரைப்படங்களில் ஒலிக்கச் செய்த பாபநாசம் சிவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவரது தொண்டை பாராட்டி நிதி […]

Read more

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?, இராம்குமார் சிங்காரம், தாய் வெளியீடு, விலை:ரூ.120. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். தொழிலில் முன்னேறுவதற்கான பாதைகள் தடைபட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பல துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட இராம்குமார் சிங்காரம் எழுதியிருக்கும் ‘நீங்க இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்னும் நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொருவரும் வருமானத்தை உயர்த்தி வசதியாக வாழ்வதற்கான 25 உத்திகளைத் தரும் 25 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கைந்து பக்கங்களில் சுருக்கமாக […]

Read more