மதாம்

மதாம், டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.400. மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளேயின் மனைவி ழான் என்பவரைக் குறிக்கிறது. அவரது வரலாற்றையும், டியூப்ளேயின் வரலாற்றையும் புதுச்சேரியின் பேச்சு வழக்குடன் எடுத்துஉரைக்கிறது. பிரெஞ்சு சொற்கள் தமிழ் மயமாக்கப்பட்டு நாவலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை விளக்குவதற்காக நட்சத்திரக் குறியிட்டு பொருள் விளக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கவர்னராக டியூப்ளே, 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அந்த வரலாறு தான் நாவலாகியிருக்கிறது. கவர்னராக இருந்த அவரை குற்றவாளி […]

Read more

காலா பாணி

காலா பாணி, டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.650 ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப் பற்றியது இந்த நுால். கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்துப் போராளிகளை எல்லா வகைகளிலும் ஒடுக்கியும், கொன்று குவித்தும், நாடு கடத்தியும் செயல்பட்ட நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண்ணத் தேவர் உள்ளிட்ட 73 போராட்ட வீரர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காலா பாணியாக ஆக்கிய கதையை விளக்குகிறது. காலா பாணி என்ற சொல்லுக்குக் கறுப்புத் தண்ணீர் என்று […]

Read more