பிராணாயாமம்
பிராணாயாமம், வேணு சீனிவாசன், குறிஞ்சி, விலைரூ.160.
நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் பிராணாயாமம் என்ற மூச்சுப்பயிற்சி செய்முறையை எளிமையாக விளக்கும் நுால். பிறவி வேண்டும் என்ற தலைப்பில் துவங்கி, நோய் நீக்கும் பிராணாயாமம் என்ற தலைப்பு வரை, 31 கட்டுரைகள் உள்ளன.
மிக எளிய முறையில், மூச்சு பயிற்சி செய்யும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சித்தர்களின் பாடல்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. ஆசிரியர் நேரில் அமர்ந்து விளக்குவது போல் உள்ளது.
முத்திரைகள் பற்றியும் ஒரு அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக கருத்தை உள்வாங்கி, குருவின் வழிகாட்டுதல்படி பயிற்சி மேற்கொண்டால் அமைதியான வாழ்வு நிச்சயம். அதற்கு அடித்தளமிடும் நுால்.
– மதி
நன்றி: தினமலர், 2/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000015848_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818