பறையும் பாவையும்
பறையும் பாவையும், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.110.
புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பினால், பாடல்களும், அதன் அர்த்தமும் வரிசையாக உள்ளன. ‘திருப்பாவைக்கு நிறைய புத்தகங்கள் அர்த்தத்துடன் வந்துவிட்டதே…’ என்ற எண்ணம் முதலில் எழத் தான் செய்கிறது. ‘இவ்வளவு தானா… விசேஷம் ஒன்றும் இல்லையே…’ என்ற எண்ணத்துடன், 43ம் பக்கத்தைத் திருப்பும்போது தான், ஆசிரியரின் சிறப்பம்சம் துவங்குகிறது. பாவை என்றால் என்ன, பாவை நோன்பு எங்கு தோன்றியது, ஆண்டாள் யார், பறைக்கு ஆண்டாள் ஏன் முக்கியத்துவம் கொடுத்தாள், கண்ணன் காலத்திலேயே இந்த நோன்பு இருந்ததற்கான ஆதாரம் என விவரிக்கிறார்.
‘நாம் நினைப்பது போல், ஆண்டாள் பக்தி மார்க்கத்தில் மட்டும் திளைக்கவில்லை; கர்ம யோகத்தைச் சொல்லிக் கொடுத்து, இறுதியில் ஞான மார்க்கத்தை விளக்குகிறாள்’ என்பது அழகுற விளக்கப்பட்டிருக்கிறது.
– பானுமதி
நன்றி: தினமலர்,2/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818