பறவையியல்

பறவையியல்,  வ.கோகுலா, சி.காந்தி,  ஜாஸிம் பப்ளிகேஷன், பக்.200, விலை ரூ.300. நம் மனதைக் கவரும் பறவைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பல உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். நூலின் முதற்பகுதியில் இந்த உலகம் தோன்றிய முறை, உயிரினங்கள் தோன்றியது, கண்டங்கள் இடம் பெயர்ந்தது, பறவையினங்களின் தோற்றம் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. அரிஸ்டாட்டில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை தனது விலங்குகளின் வரலாறு நூலில் சேர்த்ததை பறவையியல் ஆய்வின் தொடக்கமாக கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் நடந்த ஆய்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். பறவைகளின் இறகுகள் எம்மாதிரி அமைந்துள்ளன? […]

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா, சி. காந்தி, ஜாசிம் பப்ளிகேஷன், பக். 200, விலை 300ரூ. செல்லப்பிள்ளைகளாய் வளர்த்தும், செல்லும் இடங்களிலெல்லாம் ரசித்தும் மக்கள் பரவசப்படும் பறவைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், கோட்பாடுகளையும் அவற்றின் உடலியக்கத்தில் உள்ள அற்புதமான அறிவியல் அருமைகளையும் உள்ளடக்கிய நூல் இது. பண்டைய காலம்தொட்டு தூதாக, அமைதியின் அடையாளமாக, இலக்கிய அங்கமாக, விளையாட்டுப் பொருளாக, பந்தயம் நடத்த, ஆரூடம் பார்க்க, புராணப்புனைவுகளில் இறை வாகனங்களாக, மூதாதையரின் நினைவூட்டிகளாக வாழ்ந்து, இன்றும் நாகரிக அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் விளங்கும் பறவையினத்தின் வரலாறு பயில பயில வியப்பைத்தரும். […]

Read more