மங்கையர்க்கரசியின் காதல்

மங்கையர்க்கரசியின் காதல், வ.வே.சு.ஐயர், முல்லை நிலையம், விலை 55ரூ. கமல விஜயம், மங்கையர்க்கரசியின் காதல், அனார்க்கலி உள்ளிட்ட 8 தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய நூல். இதில் இடம் பெற்றுள்ள கதைகளை படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதுடன், உயர்ந்த கருத்துக்களை படிப்பவர்களுக்கு கற்றுதரும் பாடமாகவும் அமைந்துள்ளது. தமிழில் கதை எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்வழியை காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. இன்றைய பேட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகளை கல்வி, கேள்வி, ஞானம் யாவற்றிலும் சிறந்தவர்களாக எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு, தேர்வுக்கு படிக்க வைப்பது எப்படி? நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி? என்பன போன்ற அனைத்துச் செய்திகளையும் சொல்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், விலை140ரூ. ஆன்மிக வழிபாடு அதிகமாக இருந்தாலும், ஆன்மிகத்தைப் பற்றிய அறிதல் குறைவாகவே இருக்கிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆன்மிக, தத்துவ, சமூக, அறிவியல் விளக்கங்களுடன் அவசியம் அறிய வேண்டிய செய்திகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. ஸ்ரீராமானுஜரின் சரிதம் ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை “பொலிக பொலிக” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் பா. ராகவன். ஒரு நாவல் போல விறுவிறுப்புடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

சங்க இலக்கியத்தில் சூழலியல்

சங்க இலக்கியத்தில் சூழலியல், ஆ. அரிமாப்பாமகன், இராசகுணா பதிப்பகம், விலை 190ரூ. அனைத்து உயிர்களுக்கும் மரியாதை தர மறந்தால், வாழ்க்கை என்பது முடிவுக்கு வந்துவிடும் என்பதை நூலாசிரியர் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். சங்க இலக்கியங்கள் சூழலியல் திறனாய்விற்கு உட்பட்டு இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், புலவரேறு அரிமதி தென்னவன், டி.எஸ். புத்தக மாளிகை, விலை 120ரூ. மனித மனங்களின் நிலையான உயர்வு என்பது அறநூல்களைப் பொறுத்தே உள்ளது. அந்த உணர்வோடு ஆத்திச்சூடி, நன்னெறி ஆகிய ஏழு அறநூல்களுக்கு புலவரேறு அரிமதி தென்னவன் கருத்தும், விளக்கமும் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

எல்லையில்லா பிரபஞ்சம்

எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 250ரூ. பிரபஞ்சம் வரையறைக்கு உட்படாதது. தோற்றமும் முடிவும் அற்றது. இந்த பிரபஞ்சத்தின் கீழ் அண்டவியல், சூரியக்குடும்பம், கோள்கள், நட்சத்திரம், பூமி மற்றும் அதில் இருக்கும் மலைகள், கடல்கள், எரிமலை, வாழும் உயிரினம் என அனைத்தையும் அடக்கிவிடலாம். அவை குறித்து இந்த நூலின் மதிமாறன் ஆய்வு நோக்கில் அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறார். இந்த நூல் வானியல் பற்றியும் பேசுகிறது. வான்வெளி அறிவியல் சாதித்தவை குறித்தும் பேசுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த […]

Read more

ஆரோக்கியம் உங்கள் கையில்

ஆரோக்கியம் உங்கள் கையில், டாக்டர் பி.எஸ்.லலிதா, விகடன் பிரசுரம், விலை 155ரூ. நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள், உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்துள்ளன. எந்த உறுப்பு எந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம், நோயாளியை குணப்படுத்தலாம் என்று கூறுகிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மருந்தில்லா மருத்துவம் பற்றி பல தகவல்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more
1 6 7 8