அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண்

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ், விலை 220ரூ. சினிமா நட்சத்திரமாக ஒளிவீசி, பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, தமிழக முதல்-அமைச்சராகபணிபுரிந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகாசுப்ரமணியன். இந்தப் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் – ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85படங்கள் வெள்ளிவிழா (25 வாரம்) கொண்டாடியவை. நடிக்க மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் திறமையானவர்.திரைப்படங்களில் 11 பாடல்கள் பாடியுள்ளார். 1968-ல் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற […]

Read more

பொய்யாமொழி

பொய்யாமொழி, முனைவர் மு. பழனிசாமி, நிவேதிதா பதிப்பகம், விலை 180ரூ கவிதைகள், கட்டுரைகள், வேளாண்மை நூல்கள் எழுதிப் புகழ்பெற்ற முனைவர் மு.பழனிசாமி “பொய்யா மொழி” நாவலை எழுதி வெற்றி பெற்றுள்ளார். நல்ல தமிழில் நாவலை சுவைபட எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ‘நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம்

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம், சோமலெ, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், சுரங்கம் தோண்டப்பட்டதும் வியப்பான வரலாறு. அதை, சுவைபட எழுதியுள்ளார் சோமலெ. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

ஆரோக்கிய வாழ்விற்கு மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

ஆரோக்கிய வாழ்விற்கு மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும், ஆசிரியர் கயிலை சிவம் நாக. சுந்தரமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல். மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கான வழிகளை தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர் “கயிலை சிவம்” நாக. சுந்தரமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, புலவர் கா. கோவிந்தன், ராமையா பதிப்பகம், விலை 90ரூ. நாகரிகத்தில் சிறந்தவர்கள் தமிழ் மக்கள். ஆரியர் வருகைக்கு முன்பு அவர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்த நூலின் நோக்கம். தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், சமுதாய அமைப்பு முறை, திருமண முறை, வணிகம் என பல்வேறு வாழ்க்கை முறைகளை சங்க இலக்கிய சான்றுகளுடன் புலவர் கா.கோவிந்தன் தொகுத்தளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா, மஹதி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’ எழுதிய நூல். முதல் பகுதியில் ‘விடுதலைப் போரில் வீர முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் கான் சாகிபின் கடைசி நாட்கள், திப்பு சுல்தான் கடைசி நாட்கள், முதல் புரட்சி, மலையாள மாப்பிளைமார் புரட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில், ‘முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா’ என்ற தலைப்பில், இந்தியா மற்றும் தென்னகத்தில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி பற்றியும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும் எழுதியுள்ளார். குற்றவாளி கூண்டில் அவுரங்கசீப், ஹைதர் […]

Read more

முதலீட்டு மந்திரம் 108

முதலீட்டு மந்திரம் 108, நாணயம் விகடன் சி.சரவணன், விகடன் பிரசுரம், விலை 150ரூ. பணத்தை எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்று விவரிக்கிறது இந்த நூல். ஒருவர் மாதம் ரூ.1000 வீதம் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கோடீசுவரர் ஆகலாம் என்று கூறுகிறார், இந்த நூலின் ஆசிரியரும், “நாணயம் விகடன்” இதழின் முதன்மை பொறுப்பாசிரியருமான சி. சரவணன். சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுவதுடன் 108 முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறார். பொருளாதாரம் பற்றிய முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளவும், […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், பேராசிரியர் நன்னன், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. 94 வயதான பேராசிரியர் நன்னன் 724 பக்கங்களில் இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் நூலை தமிழ் கூறும் நல் உலகுக்கு விளக்கவுரையுடன் வடித்து தந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு பகுதியையும், முழுப்பாட்டு, அந்த பாட்டின் உரைப்பாட்டு, அதன் பொழிப்பு, அதில் உள்ள அருஞ்சொற்களின் பொருட்கள், அந்த பகுதியின் விளக்கம் என்று எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதி இருக்கிறார். சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்து இயங்கும் காப்பியம் என்று கூறியுள்ள பேராசிரியர் நன்னன், கண்ணகி தன் வாழ்வை இழந்து […]

Read more

வெளிச்சம்

வெளிச்சம், முனைவர் ஆ.ஸ்டீபன், ஈ. குழந்தைசாமி, காகிதம் பதிப்பகம், விலை 60ரூ. குறும்படமாகத் தயாரிக்கப்பட்ட “வெளிச்சம்” நாடகம். இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் சுவையான நாடகம். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம், ஜெ.சி.டி. பிரபாகர், இதயக்கனி பிரசுரம், விலை 60ரூ. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து 20 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை படிப்பதன் மூலம் எம்.ஜி.ஆரின் இயல்பான குணங்களை முழுமையாக நாம் அறிந்துகொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more
1 4 5 6 7 8