இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திரமவுலி, செங்கை பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்…’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, உழவுத் தொழிலின் மேன்மை குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் இந்நூல் பல புதிய செய்திகளை தருகிறது. நாம் உண்ணும் உணவிற்குப் பின்னால் பெயர் தெரியாத பலரின் அரிய சக்தியும், உழைப்பும் இருப்பதை இந்நூல் விளக்குகிறது. 18ம் நூற்றாண்டில் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டதன் சூழ்நிலை குறித்தும் (பக். 27), விவசாயம் செய்வதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும், ‘விவசாயம் […]

Read more

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை, இரா. சம்பத், சாகித்திய அகாதெமி, பக். 224, விலை 110ரூ. 18 அறிஞர்களின் பயனுள்ள தொகுப்பு இன்றைக்கு அறுபதைக் கடந்து நிற்பவர்களை அந்தக் காலத்தில் கிறங்க அடித்த பல திரையிசைப் பாடல்களுள் ஒன்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல். இதுபோன்ற பல பாடல்களுக்கு இறவா வரம் தந்தவர் கவி.மு.ஷெரீப். மகாபாரத பீஷ்மரின் தியாகத்தைப் போற்றுகிற ‘மச்சகந்தி’, ‘பல்கீஸ் நாச்சியார் காவியம்’ ஆகிய காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அரசியல், மொழியியல் என்று கவிதைக்கு அப்பாலும் பல துறைகளில் தம்மை […]

Read more

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்சினை?

இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்சினை?, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. திருட்டு, கொலை, கொள்ளை என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் திருத்துவதற்காக ஏற்பட்ட சிறைச் சாலைக்குள்ளேயே குற்றங்கள் நிகழ்வதன் காரணம் என்ன என்று ஆராய்கிறது ஒரு கட்டுரை. தங்கள் பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற வேகமும் கவலையும் கைதிகளிடம் இருக்கிறது. அதை யாரிடமும் கொட்ட வழியில்லாதபோது மனதுக்குள்ளேயே புழுங்கி ஆத்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு சிறைச்சாலையிலும் கவுன்ஸிலிங் அவசியம்’ என்கிறார் ஆசிரியர். காணாமல் போகும் பெண் […]

Read more

அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கார்

அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கார், பேராசிரியர் மு. இராமதாஸ், புதுச்சேரிகூட்டுறவு புத்தக சங்கம், விலை 380ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை “பாரத ரத்னா” அண்ணல் அம்பேத்கார். இந்தியாவின் வரலாற்றில் அவேர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அவருடைய வரலாற்றை, எல்லோரும் விரும்பி ரசிக்கும் விதத்தில் பேராசிரியர் மு.இராமதாஸ் எழுதியுள்ளார். அம்பேத்காரின் சாதனைகளும், இந்தியாவின் முன்னேற்றதுக்கு அவருடைய செயல்பாடுகளும் எவ்வாறு உதவின என்பது பற்றிய விவரங்களும் இதில் உள்ளன. படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 23/8/2017.

Read more

பாரதி காவியம்

பாரதி காவியம், நெல்லை சு. முத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 300ரூ. மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த “பாரதி காவியம்” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதை எழுதிய நெல்லை சு.முத்து, இந்திய விண்வெளித்துறை முதல் நிலை விஞ்ஞானி என்றாலும், இலக்கியத்தில் மூழ்கித் திளைப்பவர். தமிழில் 140 நூல்கள் எழுதியுள்ள சாதனையாளர். பாரதி வரலாற்றை அருமையான கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார். படிப்பவர்கள் “நிச்சயமாக இது ஒரு காவியம்தான்” என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அருமையும், […]

Read more

அறிவோமா பிரம்ம சூத்திரம்

அறிவோமா பிரம்ம சூத்திரம், வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதி பதிப்பகம், பக். 216, விலை150ரூ. இந்திய நாட்டில், ஆன்மிக பொக்கிஷங்களாக இருப்பவை உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்று பெரியோர் கூறுவர். இம்மும்மணிகளில் பிரம்ம சூத்திரம் வியாச முனிவரால் எழுதபட்டு, பின் ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரால் உரை விளக்கங்கள் எழுதப்பட்டன. இந்நூல், ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய வடமொழி உரையை, மிக எளிய தமிழில், யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிவந்து உள்ளது. வேதங்கள் கர்ம காண்டம், பிரம்ம காண்டம் என்று […]

Read more

கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி?, டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக். 32, விலை 15ரூ நாம் எந்தப் பொருளை எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆழமாகச் சிந்தித்து தயார் செய்ய வேண்டும். வாக்கியங்கள் கருத்தால் பிணைந்து செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

எரிநட்சத்திரம்

எரிநட்சத்திரம், ரா. கிருஷ்ணமூர்த்தி, வசந்தா பதிப்பகம், விலை1 25ரூ. ஒரு சினிமா நடிகையின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் ரா. கிருஷ்ணமூர்த்தி. உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிமயமான கதை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017

Read more

திருக்குறள்

திருக்குறள், புலவர் துரை தமிழரசன், கதிரவன் பதிப்பகம், விலை 400ரூ. உலக அளவில் திருக்குறளுக்கு வெளியான உரைகள் போல வேறெந்த நூலுக்கும் உரைகள் வெளியானதில்லை. இவ்வளவு உரைகள் இருந்தபோதிலும் தமக்குத் தோன்றும் புதிய கருத்துகளை – சிந்தனைகளை தமிழ் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய உரைகளை பலரும் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் புலவர் துரை தமிழரசனின் ‘திருக்குறள் எளிய தெளிவுரையும், இனிய ஆய்வுரையும்’ என்ற இந்த நூலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன. […]

Read more

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி, கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி, செம்மொழிக்கழகம், விலை 70ரூ. முதல் படத்திலேயே (“பராசக்தி”) புகழின் சிகரத்துக்குச் சென்றவர் சிவாஜிகணேசன். “வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில், கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டியவர். அந்த நடிப்பு அவருக்கு ஆசியா – ஆப்பிரிக்கா நாடுகளின் தலைசிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றுத் தந்தது. கலைத்தாயின் தலைமகன் என்று அவனைவராலும் போற்றப்ட்ட சிவாஜிகணேசனைப் பற்றி, உணர்ச்சி மயமான பாடல்களை எழுதியுள்ளார், கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி. நல்ல தமிழில், அதே சமயம் எல்லோரும் புரிந்து ரசிக்கும் விதத்தில் கவிதைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more
1 3 4 5 6 7 8