திருக்குறள்
திருக்குறள், புலவர் துரை தமிழரசன், கதிரவன் பதிப்பகம், விலை 400ரூ.
உலக அளவில் திருக்குறளுக்கு வெளியான உரைகள் போல வேறெந்த நூலுக்கும் உரைகள் வெளியானதில்லை. இவ்வளவு உரைகள் இருந்தபோதிலும் தமக்குத் தோன்றும் புதிய கருத்துகளை – சிந்தனைகளை தமிழ் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய உரைகளை பலரும் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் புலவர் துரை தமிழரசனின் ‘திருக்குறள் எளிய தெளிவுரையும், இனிய ஆய்வுரையும்’ என்ற இந்த நூலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன.
முப்பால்களுக்கு பெரு விளக்கமும், இயல்களுக்குச் சிறு விளக்கமும், அதிகாரத்திற்கு விளக்கமும் தந்துள்ளார். அதிகாரத்தின் முடிவில் தொகுப்புரையாக நீண்ட சுவையான கருத்துரை வழங்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017.