ஒப்பு நோக்கில் காந்தியடிகள்

ஒப்பு நோக்கில் காந்தியடிகள் – மார்க்ஸிலிருந்து வள்ளலார் வரை, கா.செல்லப்பன்,  எழிலினி பதிப்பகம், விலை: ரூ.180. உலகப் பேரறிஞர்களுடன் காந்தியை ஒப்பீடு செய்து பேராசிரியர் கா.செல்லப்பன் எழுதியுள்ள இந்நூல் முக்கியமானது. காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் போதாமைகளை இந்நூல் தகர்க்கும். ‘தனது வாழ்க்கையே ஒரு சத்திய வேட்கை. தம் வாழ்க்கையே சத்தியத்தின் பரிசோதனைக் களம் எனக் கருதியதால், தமது சுயசரிதையை ‘சத்திய சோதனை’ என்று காந்தி குறிப்பிட்டார். ‘புத்தரும் மகாவீரரும் ஏசுவும் அஹிம்சையைப் போதித்தனர். ஆனால், காந்திஜிதான் அதை அரசியலில் பயன்படுத்தி வெற்றியும் கண்டார்’ […]

Read more

இங்கிலாந்தில் 100 நாட்கள்

இங்கிலாந்தில் 100 நாட்கள், அகிலா, எழிலினி பதிப்பகம், விலைரூ.300. பயண இலக்கியங்கள், ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்கள் வாழ்வியலை தெரிந்துகொள்ள வழி செய்கின்றன. பயண நுாலுக்கு முக்கியத்துவம், அதன் எளிய மொழிநடை தான். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் விழாக்கள், வாழ்வியல், அரசியல் என, 22 தலைப்புகளில் விரித்துள்ளார். போக்குவரத்து வசதி, பணம், மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. லண்டன் மாநகர அரண்மனைகள், கோட்டைகள், தேவாலயங்கள் என பல குறிப்புகளை கொண்டுள்ளது. பயண இலக்கியத்தில் முக்கிய நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர், […]

Read more

ஒப்புநோக்கில் காந்தியடிகள்

ஒப்புநோக்கில் காந்தியடிகள், மாா்க்ஸிலிருந்து வள்ளலாா் வரை, கா.செல்லப்பன், எழிலினி பதிப்பகம், பக்.116, விலை ரூ.180. காந்தியடிகளின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகிற அல்லது முரண்படுகிற சிந்தனையாளா்களுடன் காந்தியடிகளின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பாா்க்கும் முயற்சியே இந்நூல். காரல்மாா்க்ஸ், உலக இலக்கியத்தில் தனி இடம் பெற்றிருக்கும் ஷேக்ஸ்பியா், லியோ டால்ஸ்டாய், கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாா்டின் லூதா் கிங், கவிஞா் ஷெல்லி, சிந்தனையாளா் ரஸ்கின், ஹென்றி டேவிட் தோரோ, எமா்சன், திருவள்ளுவா், நேரு, திரு.வி.க., வள்ளலாா் உள்ளிட்ட பல சிந்தனையாளா்களோடு காந்தி உடன்படும் பல அம்சங்களை இந்நூல் […]

Read more

பீனிக்ஸ் பெண்கள்

பீனிக்ஸ் பெண்கள், வினிதா மோகன், எழிலினி பதிப்பகம், விலைரூ.250 உலக அளவில் தன்னம்பிக்கை ஊட்டும் பெண்களின் வெற்றி வாழ்க்கை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 20 பேர் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டுரையே, தமிழகத்தில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியது. சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன், சாதனையை வியந்து எழுதப்பட்டுள்ளது. பல துறைகளில் மிளிர்ந்த பெண்களின் வியப்பான வாழ்க்கை, சாதனை புரிய துாண்டுதல் என நம்பிக்கை தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பதின்பருவ சிறுமியர், லட்சியப் பாதை வகுக்க உதவும் .நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் […]

Read more

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள்

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள், பகுதி 1,  ப.மருதநாயகம், எழிலினி பதிப்பகம்,  விலை: ரூ.350. ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் முயற்சி. […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. ஆறடுக்கு முறைப் பதிப்பு ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது சேர முனிவரான இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. கற்பில் சிறந்த கண்ணகி, அவளுடைய கணவன் கோவலன் ஆகியோரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. இது மூவேந்தர்களின் தலைநகரான புகார், (காவிரிப்பூம்பட்டினம்), மதுரை, வஞ்சி என்னும் மூன்று பெருமைகளையும் விளக்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு ஆறடுக்கு முறைப் பகுப்பில் புலவர் மா.நன்னன், அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். முதலில் ஒவ்வொரு காதைகளிலும் உள்ள […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், பேராசிரியர் நன்னன், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. 94 வயதான பேராசிரியர் நன்னன் 724 பக்கங்களில் இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் நூலை தமிழ் கூறும் நல் உலகுக்கு விளக்கவுரையுடன் வடித்து தந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு பகுதியையும், முழுப்பாட்டு, அந்த பாட்டின் உரைப்பாட்டு, அதன் பொழிப்பு, அதில் உள்ள அருஞ்சொற்களின் பொருட்கள், அந்த பகுதியின் விளக்கம் என்று எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதி இருக்கிறார். சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்து இயங்கும் காப்பியம் என்று கூறியுள்ள பேராசிரியர் நன்னன், கண்ணகி தன் வாழ்வை இழந்து […]

Read more