இங்கிலாந்தில் 100 நாட்கள்

இங்கிலாந்தில் 100 நாட்கள், அகிலா, எழிலினி பதிப்பகம், விலைரூ.300. பயண இலக்கியங்கள், ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்கள் வாழ்வியலை தெரிந்துகொள்ள வழி செய்கின்றன. பயண நுாலுக்கு முக்கியத்துவம், அதன் எளிய மொழிநடை தான். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் விழாக்கள், வாழ்வியல், அரசியல் என, 22 தலைப்புகளில் விரித்துள்ளார். போக்குவரத்து வசதி, பணம், மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. லண்டன் மாநகர அரண்மனைகள், கோட்டைகள், தேவாலயங்கள் என பல குறிப்புகளை கொண்டுள்ளது. பயண இலக்கியத்தில் முக்கிய நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர், […]

Read more

நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ. மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம் இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் […]

Read more