உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை

உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை, நவீனா அலெக்சாண்டர், அந்தாழை, பக். 142.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தி வந்த உலகத் திரைப்படங்களையே இன்னமும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால், தற்காலத்தில் உலக சினிமா அரங்கில் நடந்து கொண்டிருக்கும் சோதனை முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் எப்போது தெரிந்து கொள்வது? அதை இட்டு நிரப்புவது தான் இந்தப் புத்தகம்!

கடந்த, ௨௦௦௦க்குப் பின் வந்த உலகின் அனைத்து சிறந்த திரைப்படங்களின் தொழில்நுட்ப (திரைக்கதை உத்தி, கேமரா டெக்னிக் மற்றும் எடிட்டிங்) விஷயங்களை உள்ளடக்கிய புத்தகம்.

மேலும், திரைக்கதையின் மூன்று விதமான அணிகள் குறித்த விளக்கமும் முதல் முறையாக இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது!

விளக்கத்துடன் நின்றுவிடாமல், அந்தத் திரைக்கதை உத்திகளைப் பயன்படுத்தி இருக்கும் திரைப்படங்களை எடுத்துக் கொண்டு, அதன் திரைக்கதை உத்தி குறித்து விளக்கிச் சொல்கிறது இந்தப் புத்தகம். சினிமா இலக்கிய பொக்கிஷம்.

– எஸ்.குரு.

நன்றி: தினமலர், 27/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *