வெள்ளித்திரைக்கேற்ற கதைகள்

வெள்ளித்திரைக்கேற்ற கதைகள், ஆர்.மகேந்திரகுமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230. மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய தலைப்புகள் கொண்ட கதைகள் சுவாரசியமாக உள்ளன. உடல் உறுப்பு தான மோசடி, அரசியல் நகர்வு, ஏமாற்றுதல், அதிகாரிகளின் சுயநலம், நட்பு, குடும்பம் என, பல அம்சங்களை உணர்த்துகிறது. சினிமா இயக்கும் ஆசையுள்ளோருக்கு உதவும். – டி.எஸ்.ராயன். நன்றி: தினமலர், 22/11/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030817_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,  ஞா.கற்பகம், கற்பக வித்யா பதிப்பகம், பக்.400; ரூ.300; தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 – ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. […]

Read more

தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை , வரலாற்றுத் தடங்களின் வழியே,  இரா.செந்தில்; டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104, விலை ரூ.120. தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய நாட்டின் […]

Read more

ஔவைக் குறள் மூலமும் உரையும்

ஔவைக் குறள் மூலமும் உரையும், ஈ.சுந்தர மாணிக்க யோகீஸ்வரர், அழகு பதிப்பகம், விலைரூ.185, வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக் குறள். அதிகாரத்துக்கு, 10 வீதம், 310 குறட்பாக்கள் அமைந்துள்ளன.பதவுரை, கருத்துரை, விசேஷவுரை என்னும் மூன்று பிரிவுகளில் உரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கம் வழங்கி உள்ளதோடு, மேற்கோளாகப் பட்டினத்தார், வள்ளலார் பாடல்களையும் வழங்கியுள்ளார். இந்தப் பாடல்களிலிருந்து உரையாசிரியரின் புலமை புலப்படுகிறது. திருவள்ளுவர் போல், அவ்வையாரும் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதை இந்த நுால் உணர்த்துகிறது. இந்த […]

Read more

ஸ்ரீ விநாயக புராணம்

ஸ்ரீ விநாயக புராணம், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.150 வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட விநாயக புராணத்தை வடமொழியில் பாடினார். அதைப் பின்பற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் பாடினார். இந்நுாலில், 38 பகுதிகள் உள்ளன. பிரம்மாவிடம், வியாசர் விநாயகர் சரிதம் கேட்டது, அரக்கர்களை அழித்த ஆனைமுகன் குறித்து எழுதியவை சுவையாக உள்ளன. – டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 22/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கஸ்டமர் சைக்காலஜி

கஸ்டமர் சைக்காலஜி,  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்,  பக்.152;  விலை ரூ.170;   வாடிக்கையாளர் உளவியலை அறிவதன் மூலம் அவரை வசப்படுத்தி நமது தொழிலை எப்படி அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்பது இந்நூலில் விவரிக்கப்படுகிறது.வாடிக்கையாளருக்குத் தேவை இருந்தால் மட்டுமே பொருளை வாங்குவார். அவரை வசப்படுத்தி அதை வாங்கச் செய்துவிட முடியாது. ஆனால் தேவையை உணரச் செய்வதுதான் நல்ல வியாபார உத்தி. அதில்தான் உளவியலின் பங்களிப்பு வருகிறது. அடிப்படையான சில உளவியல் பாடங்களைக் கற்றுக் கொண்டால் போதும், வாடிக்கையாளர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என அழுத்திச் சொல்கிறார். […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்,   ப.ஜெயக்குமார்,  உமாதேவி பதிப்பகம், பக்.144, விலை ரூ. 200.  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஆண்கள் அறுபது பேர்; பெண்கள் மூவர். காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் மூவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நேரிடையாக (திருத்தொண்டத் தொகையில்) குறிப்பிடப்பட்டவர்கள். ஆனால், நாயன்மார்கள் பலரது வாழ்க்கையில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியதுடன், அவர்களை இறையருளுக்குப் பாத்திரமாக்கிய இல்லத்தரசிகள், சகோதரி, மகள் போன்றோரின் சிறப்புகளை உலகறியவில்லை என்பதுடன், நாம் உலகத்தாருக்கு உணர்த்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த அருஞ்செயலை இந்நூல் செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பெண் […]

Read more

பள்ளி புதையல்

பள்ளி புதையல், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், விலைரூ.200 விருது பெற்ற ஆசிரியர், 41- தலைப்புகளில் தகவல்களைத் தருகிறார். புத்தகமில்லா பள்ளி, பாடம் நடத்தும் முறை, எங்கே தவறிவிட்டோம் குழந்தை விரும்பும் கற்றல், ஆர்வமும் தேவையும் போன்ற தலைப்புகளில் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் படிப்பதால் அறிவு வளர்வதில்லை, தேவையானவற்றைப் படிப்பதால் அறிவு வளரும் என குறிப்பிட்டுள்ளார். கற்றல் முறைகளை எளிய நடையில் கூறுகிறது. – பேராசிரியர் இரா. நாராயணன் நன்றி: தினமலர், 22/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள் முஸ்னது அஹ்மத், அரபு மூலம்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்); தமிழில்: அ.அன்வருத்தீன் பாகவி, சா.யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி; ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன், பாகம் 1; பக்.726; ரூ.650; பாகம் 2; பக்.872;  விலை ரூ.650. 1300 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 780- களில் துர்க்மெனிஸ்தானில் பிறந்து ஈராக்கில் வாழ்ந்த இமாம் அகமது பின் ஹன்பல் என்பவர் தேடி ஆய்வு செய்து தொகுத்த ;முஸ்னது அஹ்மத் என்னும் நூல் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு முதல் இரண்டு பாகங்கள் […]

Read more

இந்துமத இணைப்பு விளக்கம்

இந்துமத இணைப்பு விளக்கம்,  கே.ஆறுமுக நாவலர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.200.  இந்து மதம் என்றால் என்ன? இந்து மதத்தின் வேத, புராண, சாத்திர, இதிகாச நூல்கள் எவையெவை? இந்து மதத்தில் உட்பிரிவுகள் எத்தனை? துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு? ஆலயம் அமைக்கும் முறை, திருவிழாக்களின் தத்துவம் என்ன – இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்துள்ளது இந்நூல். நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் […]

Read more
1 2 3 4 5