தேவதாசி முறை காலமும் கருத்தும்

தேவதாசி முறை காலமும் கருத்தும், முனைவர் கல்யாணி பிரபாகரன், காவ்யா பதிப்பகம், விலைரூ.400 மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன. தேவரடியார் எனப்படும் இவர்கள் ஆடல், பாடல், கோவில் பராமரிப்பு மற்றும் கோவில் பணிக்கான யாவற்றையும் செய்து வந்தனர். இவர்களைப் பற்றி பல நுால்கள் வெளி வந்துள்ளன. இந்நுால் முனைவர் பட்ட ஆய்வு.பதினேழு கட்டுரைகளில், தேவதாசி இன வரலாற்றை முழுமையாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். தேவதாசிகள் பெரும்பாலும் நடன மாதர்களாகவும் இருந்துள்ளனர். உலக அளவிலும், இந்தியாவிலும் கோவில்களில் இத்தகைய பெண்கள் […]

Read more

கருவறைத் தேசம்

கருவறைத் தேசம், முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர்கள் தோட்டம், விலைரூ.180 கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார். வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ […]

Read more

இந்திய பாரம்பரியத்தில் சுவை

இந்திய பாரம்பரியத்தில் சுவை, முனைவர் லட்சுமி ராமசுவாமி, ஸ்ரீ முத்ராலயா, விலைரூ.500 பிரபல நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரிய ஆய்வு நுால். தமிழ் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியங்களில், ‘சுவை’ பற்றிய ஒப்பீட்டை வழங்குகிறது. ஆடற்கலை பற்றிய சங்க கால சாத்தனாரின் கூத்த நுாலை, பல சமஸ்கிருத நுால்களோடு ஒப்பாய்வு செய்து, அரிய தகவல்களை தந்துள்ளார். நாட்டியக்கலை நுணுக்கங்களை கூறுவதாக இருந்தாலும், நாட்டியக் கலையையே அறியாதவர் கூட புரியும் வகையில் எளிமையாக தந்திருப்பது பாராட்டத்தக்கது. நடனக் கலையில் மிளிர விரும்புவோருக்கான ஆதார […]

Read more

ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்

ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம், ஜெயஸ்ரீ கிஷோர், சத்யா பதிப்பகம், விலைரூ.200 ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை விரதம், அதன் பலன் பற்றிய விளக்கங்களை எளிமையாகப் படிக்க முடிகிறது. ஷீரடிக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, அதைச் சுற்றியுள்ள, 23 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சனீஸ்வரர் கோவில் உள்ளது போன்ற தகவல்கள் புதுமை. பாபாவுடன் இருந்த, 12 அருளாளர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பாபா தினமும் பிச்சை […]

Read more

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள், ஆ.இரத்தினம், கலைக்கோ, விலைரூ.140 திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது. திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது. குடிசெயல் வகை […]

Read more

விடியல் தேடும் பூக்கள்

விடியல் தேடும் பூக்கள், விஜய் மேகா, ஆகாஸ் பதிப்பகம், விலைரூ.100 சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பரமசிவம்என்ற விஜய் மேகா எழுதியுள்ளார். பல்வேறு நாடக நூலை இயற்றியுள்ளார். வட்டார வழக்கில் இந்த நாடக நூல் எழுதப்பட்டுள்ளது சென்னையில் தொடங்கிய காதல், திருச்செந்துார் முருகன் சன்னதியில் மூன்று ஜோடிகளின் திருமணமாய் நிறைவடைந்ததை நகைச்சுவையாகவும் ரசனை மிக்கதாகவும் எழுதியுள்ளார். ஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்கள் நாடகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. ஆற்றொழுக்கான எளிய நடையில் எழுதப்பட்ட நுால். […]

Read more

எந்தையும் தாயும் – 2

எந்தையும் தாயும் – 2, ராஜேஸ்வரி கோதண்டம், கோரல் பதிப்பகம், விலைரூ.110 ஒவ்வொருவர் வாழ்விலும் தாய், தந்தையின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய பிரபல எழுத்தாளர்களின் தாய், தந்தையுடனான அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். பெற்றோரின் சிறப்பு, உருவாகக் காரணமான கிராமச் சூழ்நிலை, கூட்டுக் குடும்ப நிகழ்வுகள் என சுவையான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. பொன்னீலன் முதல் பேராசிரியர் மு.ராமச்சந்திரன் வரை, 17 எழுத்தாளர்களின் நினைவுப் பெட்டகத்திலிருக்கும் குவியலாக சிறக்கிறது. இவர்களின் அனுபவங்கள் தாய், தந்தையின் உழைப்பையும், தியாக உணர்வையும், அன்பையும் வெளிப்படச் செய்கிறது. இதை […]

Read more

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம், நாஞ்சில் நாரண.தொல்காப்பியன், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.400 திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன், கிறித்தவத்துக்கு மாறிய நிகழ்வுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக விளை நிலத்தை தானமாக வழங்கியதும் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் மன்னராட்சியின் போதிலான கயமை, சூழ்ச்சி, வீழ்ச்சி, முறைகேடுகளுக்கு துணை நின்றோரின் கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க நடந்த போராட்டங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. போராட்டங்களில் துணை நின்ற கிறித்தவ சமய போதகர்களின் தொண்டுகளையும் அறிய முடிகிறது. ஆங்கிலேயக் கம்பெனி, திருவிதாங்கூர் அரசு, […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.610 தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம், பேய், ஒற்றைக்கண் மனிதன், சீன ஒற்றர்கள், மீனழகி ஆகிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். ஏற்கனவே தொடர்கதையாக வாசித்தவர்கள், இப்போது படித்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யும். எளிமையான உரைநடையைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவர் தமிழ்வாணன். அவர் எழுதிய வாக்கியங்கள் நான்கு, ஐந்து சொற்களுக்குள் இருக்கும். பல தொடர்கள் ஒரு சொல்லாகவே அமைந்திருக்கும். […]

Read more

சிலேட்டுக்குச்சி

சிலேட்டுக்குச்சி, சக.முத்துக்கண்ணன், பாரதி புத்தகாலயம், விலைரூ.110 மாணவ – மாணவியரோடு செலவிடும் கொடுப்பினை, ஆசிரியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அவர்களின் உளவியல் அனுபவங்களை, ஒரு ஆசிரியரால் தான் உள்வாங்க முடியும். அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து, மாணவர்களின் வாழ்வியலை உள்வாங்கி, கட்டுரை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு..’ என துவங்கி, ‘அவன விட்ருங்க பாஸ்..’ என முடியும், 17 கட்டுரைகள் முழுதும் சேட்டைகள் தான். கட்டுரைகள் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. பழைய இலக்கியம் முதல், நவீன இலக்கியம் வரை வாசித்த […]

Read more
1 2 3 4 5