எந்தையும் தாயும் – 2
எந்தையும் தாயும் – 2, ராஜேஸ்வரி கோதண்டம், கோரல் பதிப்பகம், விலைரூ.110
ஒவ்வொருவர் வாழ்விலும் தாய், தந்தையின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய பிரபல எழுத்தாளர்களின் தாய், தந்தையுடனான அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். பெற்றோரின் சிறப்பு, உருவாகக் காரணமான கிராமச் சூழ்நிலை, கூட்டுக் குடும்ப நிகழ்வுகள் என சுவையான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
பொன்னீலன் முதல் பேராசிரியர் மு.ராமச்சந்திரன் வரை, 17 எழுத்தாளர்களின் நினைவுப் பெட்டகத்திலிருக்கும் குவியலாக சிறக்கிறது.
இவர்களின் அனுபவங்கள் தாய், தந்தையின் உழைப்பையும், தியாக உணர்வையும், அன்பையும் வெளிப்படச் செய்கிறது. இதை மாணவர்கள் படிக்கும் போது, பெற்றோரின் பெருமையை உணர்வதோடு கடமையையும் அறிந்து செயல்பட முனைவர்.
எழுத்தாளர்களின் வாழ்வை அறிய உதவுவதுடன், இளைய சமுதாயத்தினருக்கும் பெற்றோரின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் அமைகிறது. முதியோரை ஆசிரமங்களுக்கு அனுப்புவதைத் தடுக்கும் முயற்சியாக உள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்
நன்றி: தினமலர், 6/12/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030794_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818