கருத்துக் குவியல்
கருத்துக் குவியல், டாக்டர் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம், பக். 168, விலை 150ரூ.
நீதித்துறையில் தனி முத்திரை பதித்த நீதியரசரின் சொல்லோவியங்களும் எழுத்தோவியங்களும் அடங்கிய நுல். பல்வேறு சமயங்களில், சட்டம், ஆன்மிகம், இலக்கியம், பெண் உரிமை, பொது நலம், சுற்றுச் சுழல் போன்ற தலைப்புகளில் நீதியரசர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு.
சட்டத் துறையில் மட்டுமன்றி தான் தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் அரசராக விளங்குவதை படிக்கப்படிக்க உணர முடிகிறது. உதாரணமாக, குழல், யாழ், முழவு இம்மூன்றும், தமிழின் தனிச் சிறப்பான இசைக்கருவிகள். காரணம், தமிழின் சிறப்பெழுத்தான ழ கரத்தைக் கொண்ட இவையே, தமிழ்ப் பண்ணுடன் சேர்ந்தொலித்தவை என்பது போன்ற கருத்துகள், தமிழ், ஆன்மிகம் என எல்லாத் துறையிலும் நீதியரசருக்கு உள்ள ஆழ்ந்த அறிவினைப் புலப்படுத்துவதோடு, படிக்கப் படிக்க நம் சிந்தனைக்கும் விருந்தளிக்கிறது.
நன்றி: குமுதம், 23/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818