பல்லவர் வரலாறு
பல்லவர் வரலாறு, மா.ராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், விலை 260ரூ.
தமிழகத்தை 7 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் பூர்வீகம் எது என்பதுஇன்னும் உறுதிப்படாத நிலையிலும், கி.பி.250ல் தொடங்கி, கி.பி.882 வரை நீடித்த பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது.
பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரம், அவர்களின் ஆட்சித் திறமை, அவர்கள் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்று அனைத்து விவரங்களையும் அடக்கியுள்ள இந்த நூல், பல்லவ மன்னர்களின் வரலாற்றின் முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது.
வரலாற்று உண்மைச் சான்றுகளைக் கண்டறிய ஆசிரியர் நேரில் பல இடங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டித் தந்து இருக்கிறார் என்பதை இந்த நூலைப் படிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது. இசை மற்றும் சிற்பக் கலைகளில் பல்லவர்களின் திறன், அவர்கள் கட்டிய கோவில்கள் ஆகியவை பற்றியும் இந்த நூலில் விளக்கித் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 23/10/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000010375.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818