ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்
ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ.
இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் நூலாசிரியர் டி.வி. பாலசர்மா. மேலும் நம்முடைய சமயம், கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல். நன்றி: தினத்தந்தி, 10/2/2016.
—-
மணிமேகலை, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 45ரூ.
சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்ட மணிமேகலை காப்பியத்தை மாணவர் முழுமையாகத் தமக்கேற்ற வகையில் அறிதல் வேண்டும். காப்பியத்துள் ஆசிரியரால் பதிக்கப் பெற்றுள்ள கருத்துக்களை நன்கு தெரிந்து கொள்வதோடு காப்பியத்தைச் சுவைத்து மகிழும் திறம் பெறல் வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை எளிமைப்படுத்தியுள்ளார் புலவர் நன்னன். நன்றி: தினத்தந்தி, 10/2/2016,