இவர்தாம் பெரியார்

இவர்தாம் பெரியார், 8.திருமணம், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 70ரூ.

பெரியார் வரலாறு

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “இவர்தாம் பெரியார்” என்ற தலைப்பில் தொடர்ந்து புத்தகங்களாக புலவர் நன்னன் எழுதி வருகிறார். எட்டாவது புத்தகம், “திருமணம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் பற்றியது அல்ல. பல்வேறு திருமணங்கள் பற்றி பெரியார் வெளியிட்ட அறிக்கைகளும், நிகழ்த்திய சொற்பொழிவுகளும் கொண்டது.

மாதிரிக்கு ஒன்று- 24/2/1932-ல் “குடியரசு” பத்திரிகையில் பெரியார் வெளியிட்ட அறிக்கை: “புதுவை முரசு” ஆசிரியர் தோழர் பொன்னம்பலனார் அவர்கட்கும், திருமதி சுலோசனா அவர்கட்கும் 24/5/31ல் ஏற்பட்ட விவாக ஒப்பந்தமானது, இருவருடைய அபிப்ராயப்படிக்கும் 8-4-32ல்ரத்து செய்யப்பட்ட செய்தியை அறிந்தேன். சுயமரியாதை இயக்கத்தில், முதன் முதலில் தைரியமாக விவாகரத்து செய்த இருவரையும் நாம் பாராட்டுவதோடு, இனியாவது இவர்களைப்போல் பிறரும், திடீரென்று மணம் செய்து கொள்ளாமல், நீண்ட நாள் அன்னியோன்னியமாகப் பழகிய பின்னரே மணம் செய்து கொள்ள வேண்டும் என்பதோடு, சேர்ந்து வாழ இஷ்டமில்லாத ஜோடிகள் ஆயுள் முழுவதும் துன்பக் கடலில் ஆழ்ந்திருப்பதை விட, தைரியமாக விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்பதையும் வற்புறுத்தி, இவ்விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டிய சுலோச்சனா, பொன்னம்பலனார் ஆகிய இருவரையும் மறுமுறையும் பாராட்டுகிறேன்.

நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *