பெரியார் கணினி
பெரியார் கணினி, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 650ரூ.
பகுத்தறிவு தந்தை என்றும், பகுத்தறிவு பகலவன் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார். அவர் உதிர்த்த ஐயாயிரம் பொன் மொழிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
அரசியல், அறிவியல், கடவுள், கல்வி, சமூக சீர்திருத்தம், சாதி, சுயமரியாதை, தமிழர் நாத்திகம், நரகம் மோட்சம், மதம், பகுத்தறிவு, புராண இதிகாசங்கள், பொதுவுடைமை, மூடநம்பிக்கை என்பன போன்ற தலைப்புகளில் பெரியார் மொழிந்த மொழிகளை புலவர் நன்னன் இந்த நூலில் அழகுற தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நூல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்துள்ள அணிந்துரையில், ‘‘தொகுப்பிலக்கியத்தில் இது ஒரு புதிய பொன்னேடு, பெரியாரைப் பற்றிய இந்தக் கணினி அவரது நூல்களுள் மிகப் பெரிய சீரிய நூல். கணினிகள், காலத்தால் மாறக்கூடும். ஆனால் பெரியாரின் கணினியின் தனிச் சிறப்பு – இது காலத்தையே மாற்றும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘‘புலவர் நன்னன் தமிழகத்திற்கு வழங்கியுள்ள ஒப்பற்ற கருவூலம்” என்று கலைஞர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.