பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை
பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை, எம்.ஏ. பாலசுப்ரமணியன், சித்தார்த்த பதிப்பகம், விலை 450ரூ.
ஆழ்ந்த கற்றல், வீரமிகு சுயமரியாதை, உயர்வான சிந்தனை, தெளிந்த ஞானம், ஓய்வறியா உழைப்பு மற்றும் உத்தம குணங்கள் முற்றாக நிரம்பியதே டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை.
அத்தகைய தன்னலமற்ற பேரருளாளரின் வாழ்வின் நிகழ்வுகளை, அவர் பிறந்த 14/4/1891 முதல் இறப்பான 6/12/1956 வரை நாட்குறிப்பாய் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் எம்.ஏ. பாலசுப்பிரமணியன்.
தாம் பிறந்த மண்ணிற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும் ஈடு இணையற்ற தொண்டாற்றிய பெருமகன் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை, எளிமையான நடையில் படைத்து, அவரின் 125-வது பிறந்த நாள் நினைவாக இந்நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர்
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.