லெனின்
லெனின், ஜீவபாரதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ.
மொழி பெயர்ப்பாக அல்லாமல், விரிவான தகவல்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட லெனின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வரலாறு ஒரு தனி மனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது.
லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை ஆரவாரமற்ற நடையில் எளிதாகப் புரியும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜீவபாரதி. இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய அரிய வரலாற்று நூல்.
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.