சுயமரியாதை
சுயமரியாதை, ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2ம் சந்து, முதல்மாடி, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 175ரூ.
இவர்தான் பெரியார் வரலாற்று தொடரில் 3வது புத்தகம்தான் இந்த சுயமரியாதை. தந்தை பெரியாருடன் நெருங்கிய தாடர்பு வைத்திருந்த பேராசிரியர் ம. நன்னன் இப்புத்தகத்தை தொகுத்து வெளியிட்டு உள்ளார். தந்தை பெரியாரின் பேச்சுக்கள், குடியரசு பத்திரிகையில் வந்த தலையங்கங்கள், திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். சுயமரியாதை இயக்கம் பற்றிய விளக்கங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. கடலூர் மாவட்டம் வட்டக் காவனூரை சேர்ந்த நன்னனின் இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்றபோது நீதிக்கட்சி, சுயமரியாதை இய்க்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது பெயரையே மாற்றிக்கொண்டவர். பின்னர் பெரியாரின் விருப்பத்துக்கு இணங்க ஈரோட்டில் பெரியாரின் இல்லத்திலேயே தங்கி இயக்க பணிகளில் ஈடுபட்டவர். அதன்பிறதுதான் தமிழ் ஆசிரியர் பணிக்கு சென்றார். இப்புத்தகத்தின் அடுத்த பகுதி 4. இந்தி என்ற பெயரில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
—-
கைரேகை சாஸ்திரமும் உங்கள் யோகமும், ஏ.கே. சேஷய்யா, சொர்வள்ளி பிரசுரம், 15, பழைய எண். 6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 50ரூ.
நமது கைகளில் உள்ள முக்கிய ரேகைகள், மேடுகள் பற்றியும், அது இருக்கும் அமைப்பினால் நமது வாழ்வில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளையும், நமது குணங்களையும் எவ்வாறு அறியலாம் என கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 21/11/12.