ஈழம் அமையும்

ஈழம் அமையும், கா. அய்யநாதன், கிழக்குப் பதிப்பகம், பக். 336, விலை 250ரூ.

இலங்கையில் அரசியல் சம உரிமைக்காக அறவழியில் போராடிய மக்கள், அரச பயங்கரவாதத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் ஓர் இன அழித்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது சிங்களப் பேரினவாதம். சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. ஈழம் புதைக்கப்பட்டுவிட்டது. இந்த திரைமறைவு நாடகம் எப்படி அரங்கேறியது. அதற்கு துணை நின்றவர்கள் யார்? இவற்றையெல்லாம் விரிவாக வரலாற்றுப் பின்னணி கொண்டு, அழுத்தமான அரசியல் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவி, ஈழப்போராட்டம் சிதைக்கப்பட்டவிதத்தை இந்நூல் அழுத்தமாக முன்வைக்கிறது. விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கான வழிகாட்டி நூல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *