காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை, வி. கந்தவனம், காந்தளகம், விலை 600ரூ.

இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் வி. கந்தவனம் எழுதிய நூல் இது. சங்க காலத்து மாந்தர்களின் காதல் வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், அக்கால பழக்க, வழக்கங்களையும் அறிய இந்நூல் பெரிதும் பயன்படும். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்கவரும் வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.  

—-

ஆவியின் டைரி, பேரா. க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ.

இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் மனிதன் இருக்கும் நிலையைப் பற்றி விளக்கும் அறிவியல் பூர்வமான விளக்கப் புத்தகம். பகுத்தறிவுக்கும் சாத்திர சம்பிரதாயங்களுக்கும் முரண்படாதத் தகவல்கள் இதில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *