திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம்
திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம், மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ.
திருக்கயிலையின் புனிதப் பயணத்தை விவரிக்கும் நூலிது. கயிலைக் காட்சி மயிலைக் காட்சி போல மனத்திற்கு நிறைவு தந்திருப்பதை இந்நூலில் காணலாம். வெறும் பயண விளக்கம் தரும் வழிகாட்டி நூலாக இல்லாமல் வாழ்விற்கு அருள் வழிகாட்டியாய் இப்புத்தகத்தை செம்மைப்படுத்தியுள்ளார் முனைவர் வாசுகி கண்ணப்பன். அவர் வேதம், திருமுறை, புராணம், வரலாறு எனப் பல்வேறு துணை விளக்கங்களையும் அளித்து, மேற்கொண்டு யாரேனும் திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டால் அவர்களுக்கு உதவும்வகையில், முகவரிகள், ஆலாசனைகள், எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள், இன்றியமையாக் குறிப்புகள்அனைத்தும் தந்து இந்நூலை முழுமையாக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.
—-
பாலஸ்தீன வரலாறு, எம்.எச். ஜவாஹிருல்லா, புத்தொளிப்பதிப்பகம், விலை 80ரூ.
இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய மூன்று சமயங்களின் புனித நகரமாகக் கருதப்படுவது, ஜெருஸ்ஸலம். இது அமைந்துள்ள பாலஸ்தீனத்தின வரலாற்றைப் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். தொடக்க காலம் முதற்கொண்டு 13ம் நூற்றாண்டு வரையிலான நிகழ்வுகளை சுவையாகவும், எளிமையாகவும் தந்திருக்கிறார். வரலாற்று ஆய்வாளர்களுக்கு பயனுள்ள நூல் இது. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.