வெற்றிதரும் மேலாண்மை

வெற்றிதரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ.

மேலாண்மை நுட்பங்கள் காலங்கள்தோறும் வளர்ந்து வருபவையே. ஒரு நிறுவனத்திற்கான வெற்றி தோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வது அவசியமாகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொழில் முனைவோருக்கு தமிழில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் பெரிதும் உதவக்கூடும்.உலகப் பொருளதாதாரத்தில் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மேலாண்மை யுக்திகளை சரிவர இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். புதிய யுக்திகளை நடைமுறைப்படுவத்துவது இன்றைய மேலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனப் பொறுப்பாளர்களின் முக்கியப் பணியாகும். அவர்களுக்கு இந்நூல் பெரிய அளவில் பயன்படும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *