விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், விலை 435ரூ. விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, சமூகம், எழுத்து போன்ற துறைகளில் பிரபலமானவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் சுவையாகவும்,சிந்தனைக்க விருந்தாகவும் அமைந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தொடங்கி டிராபிக் ராமசாமி வரை 40 பேர்களின் பதில் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பழ. நெடுமாறன், வைகோ, மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கவிஞர்கள் வைரமுத்து, வாலி […]

Read more

ஒரு யாகம் ஒரு தியாகம்

ஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ. சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா […]

Read more

தமிழர்தம் மறுபக்கம்

தமிழர்தம் மறுபக்கம், தமிழ்க்கோட்டம் வெளியீடு, விலை 175ரூ. தமிழர்களின் வரலாற்றைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞர் க.ப. அறவாணன், இந்நூலில் இன்றைய தமிழர்கள் பற்றி பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்கிறது. அவர் கூறுகிறார்: வேட்பாளர் தேர்வில் சாதிக்கு முன்னிரிமை கொடுக்கப்படுகிறது. நாம் பெற்ற கல்வியால்கூட, நம்முடைய சாதிப்பற்றை தகர்க்க முடியவில்லை. சாதிய அடித்தளமே இல்லாத மண்ணில் தோன்றிய இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மதங்கள்கூட, இந்தியாவில் மதம் மாற்றம் பெற்ற கிருத்துவர்களிடையே சாதி அற்ற நிலையை தோற்றுவிப்பதில் தோற்றுப்போய் […]

Read more

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 40ரூ. திராவிடர் இயக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கொண்டது. இதன் வரலாறு குறித்தும், இந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொருவரின் இன்றைய இனிய வாழ்க்கைக்கு திராவிடர் இயக்கமே காரணம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மேலும் பின்னிணைப்பாக, திராவிடர் சங்கம் தோன்றிய வரலாறு, நீதிக்கட்சி காலத்தில் சமூக நீதி ஆணைகள், சமூக சீர்திருத்த ஆணைகள் நூலுக்கு மேலும் […]

Read more

அம்மா ஓர் உலகளாவிய தலைவி

அம்மா ஓர் உலகளாவிய தலைவி, ஸ்ரீ நித்யா பதிப்பகம், விலை 300ரூ. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி, அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஜி.ஆர்.ராமதாஸ் எழுதிய புத்தகம். அன்னை தெரசா, ஜோன் ஆப் ஆர்க், விக்டோரியா மகாராணி, மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தி ஆகியோருடன் ஒப்பிட்டு ஜெயலலிதா சிறப்புகளை எடுத்துக்கூறுகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை, துணிச்சலுடன், தொலைநோக்குடனும் தீர்த்த அவர் மதிநுட்பத்தை போற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா பற்றிய சிறந்த புத்தகம், வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.   —- பெரியாழ்வார், […]

Read more

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும், ஜோஷ்வா கலபாடி, டி.அம்புரோஸ், ஜெயசேகரன், தமிழில் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 640, விலை 300ரூ. சென்னையில் கிறித்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மூன்றும் முதன்மைக் கல்லூரி துவங்கப்பட்டது. மாநிலக் கல்லூரி 1940ல் துவங்கப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி, 1842ல் துவங்கப்பட்டது. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வரலாறு ஆங்கிலத்தில், 2010ல் வெளியிடப்பட்டது. அது, தற்போது தமிழில் வெளியாகி உள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது, கல்லூரி வரலாறு மட்டும் அல்லாமல், கல்வியின் வரலாறும் வெளிப்படுகிறது. இந்தியாவின் […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், அரும்பு பதிப்பகம் மற்றும் நிறைவகம், சென்னை. கற்றல் குறைபாடு பிரச்னைக்கு தீர்வு இந்த நூல் சராசரி மாணவர்களில், ஐந்தில் ஒருவருக்குக் காணப்படும் கற்றல் குறைபாட்டைப் பற்றிய முழுமையான முதல் தமிழ் நூல். அறிவியல் பூர்வமான உண்மைகளை உளவியல் ரீதியாக, எளிய பேச்சத் தமிழில், சாமானிய மக்களையும் எளிதில் சென்றடையும்படி கதை சொல்வதுபோல் விளக்கி உள்ளது. அறிவுத்திறனிலும், விளையாட்டு போன்ற பல்கலைத் திறனிலும் சராசரியாகவோ அல்லது அதற்கும் மேம்பட்டு காணப்படும் பல பிள்ளைகள், கல்வியில் மட்டும் பின்தங்கிடும்போது, […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம்

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, வீடியா மாஸ்டர்ஸ், பக். 358, 404, 472, விலை 900ரூ (3 பாகங்கள் சேர்த்து). இந்த நூலில், 16 பர்வங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பர்வத்தின் பொருளடக்கமும் நூலின் முன்பகுதியில் இருப்பதால், நமக்குத் தேவையான பகுதியை மட்டும் படித்து அறியமுடிகிறது. சூரியனின் தேரோட்டி அருணனின் பெருமையும் (பக். 41), கவுரவர் நூறு பேரின் பெயர்கள் (பக். 77), சகுந்தலையின் கதை (பக். 101), அறுவகை வாரிசுகளின் பெயர்கள் (பக். 147), ஜராசந்தன் கதை (பக். 286), யட்சனின் […]

Read more

ஆரியர் திராவிடர் சங்கமம்

ஆரியர் திராவிடர் சங்கமம், ஜி. கிருஷ்ணசாமி, புதுயுகம் பதிப்பகம், மதுரை, விலை 275ரூ. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த உருவாக்கியது ஆரிய – திராவிட இனக்கொள்கை. அது அரசியல் தந்திரம். உண்மையில்லை என்று பிரிட்டிஷ் வானொலி நிறுவனம் (பி.பி.சி.) ஆவணப்படத்தி உள்ளது. ஆனால் அந்த பிரிவினை கொள்கையை இன்றும் தமிழகத்தில் பல அறிஞர்களும், அரசியல்வாதிகளும் பேசி வருகின்றனர். அது இன்றுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இடையூறாகவே உள்ளது. அந்த நிலை மாறி, உண்மையை உணர்ந்து, இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக […]

Read more

கோ.கேசவனின் திறனாய்வாளுமை

கோ.கேசவனின் திறனாய்வாளுமை, முனைவர் ஜெ. கங்காதரன், வையவி பதிப்பகம், பக். 264, விலை 150ரூ. முப்பத்து மூன்று நூல்கள் படைத்து, தமிழ் திறனாய்வு உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் கோ. கேசவன். பேராசிரியராகவும், ஆய்வாளராகவும், திறனாய்வாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும் செயற்பட்ட அவரது திறனாய்வு முறைமைகளைத் திறம்பட ஆய்வு செய்கிறது இந்த நூல். தமிழ்த் திறனாய்வு வரலாற்றையும், அந்த வரலாற்றில் கோ.கேசவன் பெறும் இடத்தையும் சுட்டிக்காட்டி, மார்க்சிய இயங்குதளத்தில் அவரது திறனாய்வுக் கோணங்கள் அமைந்ததை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். முனைவர் பட்ட ஆய்வு நூல் என்பதால், மேற்கோள்களின் […]

Read more
1 2 3 4 6