ஆரியர் திராவிடர் சங்கமம்
ஆரியர் திராவிடர் சங்கமம், ஜி. கிருஷ்ணசாமி, புதுயுகம் பதிப்பகம், மதுரை, விலை 275ரூ.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த உருவாக்கியது ஆரிய – திராவிட இனக்கொள்கை. அது அரசியல் தந்திரம். உண்மையில்லை என்று பிரிட்டிஷ் வானொலி நிறுவனம் (பி.பி.சி.) ஆவணப்படத்தி உள்ளது. ஆனால் அந்த பிரிவினை கொள்கையை இன்றும் தமிழகத்தில் பல அறிஞர்களும், அரசியல்வாதிகளும் பேசி வருகின்றனர். அது இன்றுள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இடையூறாகவே உள்ளது. அந்த நிலை மாறி, உண்மையை உணர்ந்து, இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அதற்கு தொல்லியல், மொழியியல், அறிவியல் நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்ந்து, தொகுத்து, உறுதியான முடிவுகளை முன் வைக்கிறார் நூலாசிரியர். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் பிரவினை அரசியலுக்கு, முதலில் பலியானவர்கள் பிராமணர்கள். காரணம், தாங்கள் உயர்வாக கருதப்படுகிறோம் என்று நினைத்து, ஏற்றுக்கொண்டதே என்பது அம்பேத்கரின் கூற்று. அதை இந்த நூல் சரியான இடத்தில் அழகாக சுட்டிக் காட்டுகிறது. -திருநின்றவூர் ரவிக்குமார். நன்றி: தினமலர், 8/11/2015.