அம்மா ஓர் உலகளாவிய தலைவி
அம்மா ஓர் உலகளாவிய தலைவி, ஸ்ரீ நித்யா பதிப்பகம், விலை 300ரூ.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி, அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஜி.ஆர்.ராமதாஸ் எழுதிய புத்தகம். அன்னை தெரசா, ஜோன் ஆப் ஆர்க், விக்டோரியா மகாராணி, மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தி ஆகியோருடன் ஒப்பிட்டு ஜெயலலிதா சிறப்புகளை எடுத்துக்கூறுகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை, துணிச்சலுடன், தொலைநோக்குடனும் தீர்த்த அவர் மதிநுட்பத்தை போற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா பற்றிய சிறந்த புத்தகம், வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.
—-
பெரியாழ்வார், எம்.பி. ஸ்ரீனிவாசன், சாகித்ய அகாடமி, விலை 50ரூ.
நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும்வகையில், 9 தலைப்புகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல். இதில் திருப்பல்லாண்டின் மேன்மை, கிருஷ்ண பக்தி, பெரியாழ்வார் திருமொழி குறித்து மிக அழகுற நூலாசிரியர் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.