கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், கவிஞர் பிரியசகி மற்றும் அருட்பணி, ஜோசப் பெஜயராஜ், அரும்பு பப்ளிகேஷன்ஸ் மற்றும் நிறைவகம், விலை 270ரூ. வகுப்பறையில் பாடம் பயிலும் மாணவர்களில் 5-ல் ஒருவருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குறைபாட்டை கண்டறிந்து, அந்த குழந்தைகளை முன்னேற்றுவதில்தான் இன்றைய சமூகம் தவறிழைக்கிறது. அந்த வகையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை இனங்கண்டு, அவர்களை கையாள்வது எப்படி? அவர்களுக்கு கசப்பாய் தெரியும் கல்வியை, கற்கண்டு போல இனிமையாக்குவது எப்படி? என பாடம் நடத்துகிறது இந்த நூல். […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், அரும்பு பதிப்பகம் மற்றும் நிறைவகம், சென்னை. கற்றல் குறைபாடு பிரச்னைக்கு தீர்வு இந்த நூல் சராசரி மாணவர்களில், ஐந்தில் ஒருவருக்குக் காணப்படும் கற்றல் குறைபாட்டைப் பற்றிய முழுமையான முதல் தமிழ் நூல். அறிவியல் பூர்வமான உண்மைகளை உளவியல் ரீதியாக, எளிய பேச்சத் தமிழில், சாமானிய மக்களையும் எளிதில் சென்றடையும்படி கதை சொல்வதுபோல் விளக்கி உள்ளது. அறிவுத்திறனிலும், விளையாட்டு போன்ற பல்கலைத் திறனிலும் சராசரியாகவோ அல்லது அதற்கும் மேம்பட்டு காணப்படும் பல பிள்ளைகள், கல்வியில் மட்டும் பின்தங்கிடும்போது, […]

Read more