சப்தங்கள்

சப்தங்கள், மலையாளம் வைக்கம் பஷீர், தமிழில் குளச்சல் மு. யூசப், காலச்சுவடு பதிப்பகம். நம்பினால் இருக்கிறான் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000000462.html மலையாளத்தில் வைக்கம் பஷீர் எழுதி, தமிழில் குளச்சல் மு. யூசப் மொழிபெயர்த்த, சப்தங்கள் என்ற குறுநாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நடைபாதை இருளில் சந்திக்கும் ஒருவரோடு, வைக்கம் பஷீர் நடத்தும் உரையாடலை, ஒருவர் கதையாக சொல்வதுதான் இந்த நாவல். இருளில் சந்திக்கும் அந்த நபர், ஒரு ராணுவ வீரன். அவரது வாழ்க்கை, காதல் […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. தமிழ் புனைவுலகின் புதிய யுக்தி To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025209.html அழுக்கு சட்டையைத் துவைத்துப்போடுவதால் புரட்சி தாமதப்படும் என்றால் பரவாயில்லை. ஆடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார் பொதுவுடைமைவாதி வி.பி.சிந்தன். கொள்கைத் தீவிரத்தில் அழகியலுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அழகியல் வாழ்வின் சிறப்பான பகுதி என்பதைத்தான் அவர் குறிப்பிட்டார். பிரசாரக் கதை எழுதும்போது, கொள்கை சில இடங்களில் சங்கடமாகவும், சில இடங்களில் சவுகரியமாகவும் இருக்கிறது. கதை […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 600, விலை 420ரூ. குமரகுருபரர் பேச்சில் மயங்கிய தாராஷூகோ காசி என்ற சொல்லே தூய்மை, மங்கலம் என்ற பொருளுடையது. மங்கலத்தை தரும் சிவபெருமான் அங்கே அருள்பாலிக்கிறார். புத்தர், காசியின் தெருக்கள் வழியே சாரநாத் சென்றார். ஆதிசங்கரர் தனது தத்துவம் வெற்றி காண, வாதுபுரிந்து வெற்றிபெற்ற தலம் அது. குருநானக் பெருமகனார், கங்கைக் கரையில் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, கபீர்தாசரும், துளசிதாசரும் நடந்த பூமி என, ஆசிரியர் அடுக்கும் தகவல்கள் ஏராளம். அதேபோல் கஜினி முகமது, அலாவுதீன் […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், தமிழில் மங்களம் சுந்தரேசன், மணிமேகலை பிரசுரம், விலை 185ரூ. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சினிமா ஏற்படுத்தி உள்ள தாக்கம் மிகப்பெரியது. அந்த தாக்கம், தமிழகத்தின் சமூக, பண்பாடு, பொருளாதார, அரசியல் என பல்வேறு தளங்களில் விரிவடைந்துள்ளது. அதை விவரிக்கிறது இந்த நூல். சிறுவர்களிடம் தமிழ் சினிமா ஏற்படுத்திய தாக்கம்தான் தலைப்பு. ஆனால் தலையை சுற்றி மூக்கை தொடுவதுபோல், சமூகத்தின் பல்வேறு படிநிலைகளுக்கு சென்று வந்த பிறகு, சிறுவர்களிடம் வருகிறது நூல். பெரும்பாலும், வீதிச் சிறுவர்களே […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ. சுசீலா, வம்சி புக்ஸ், பக். 208, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024356.html தேவி என்ற தனித்துவம் கெண்ட பெண், தனக்கான பாதையை தானே வகுத்து, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார். அவரது வாழ்வை வரலாறுபோல் அளிக்கிறார் அவர் மகள் சாரு. இந்த நூல் தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது. குழந்தைமணமும், பெண் கல்வி மறுப்பும் இன்று அருகிப்போன பிரச்னைகளாக இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இல்லை. பால்ய விவாகத்தில் விதவையாகிப் போனவர் தேவி. எதிர்ப்புகளை […]

Read more

காலப்பிரகாசிகை

காலப்பிரகாசிகை, கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 426, விலை 310ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000002619.html ஒரு விழாவைக் கொண்டாடவோ அல்லது ஒரு முக்கியச் சடங்கைத் துவங்க வேண்டியிருந்தாலோ, நல்ல நேரம் பார்த்துத்தான் எவருமே துவங்குவர். நன்மை செய்யும் கிரகங்களும், தீமை விளைவிக்கும் கிரகங்களும் உள்ளன. அதேபோல், சுப, அசுப நட்சத்திரங்களும், திதிகளும், கிரக நிலைகளும் உள்ளன. எனவே, அதற்கு அந்த நாளைப் பற்றிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் (பஞ்ச அங்கங்கள்) இவை யாவும் நன்மையளிக்கக் […]

Read more

உடல்நலம் காக்கும் உன்னதக் குழம்புகள்

உடல்நலம் காக்கும் உன்னதக் குழம்புகள், சரஸ்வதி அரங்கராசன், முகிலன் பதிப்பகம், பக். 152, விலை 120ரூ. மிளகுக் குழம்பு, வெந்தயக் குழம்பு, ஓமக் குழம்பு, கடுகுக் குழம்பு, சீரகக் குழம்பு, பூண்டுக் குழம்பு, இஞ்சிக் குழம்பு, சுக்குக் குழம்பு போன்ற மருந்தாகும் 30 குழம்புகளைச் செய்யும் முறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அரிசிச் சாதத்திற்கே மட்டுமல்லாமல் கம்பு, வரகு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவிற்கும் துணை உணவாக உட்கொள்ள ஏற்றவை இந்தக் குழம்புகள். மிளகு, சீரகம், ஓமம், கடுகு, வெந்தயம் போன்ற அஞ்சறைப் […]

Read more
1 4 5 6