உடல்நலம் காக்கும் உன்னதக் குழம்புகள்

உடல்நலம் காக்கும் உன்னதக் குழம்புகள், சரஸ்வதி அரங்கராசன், முகிலன் பதிப்பகம், பக். 152, விலை 120ரூ.

மிளகுக் குழம்பு, வெந்தயக் குழம்பு, ஓமக் குழம்பு, கடுகுக் குழம்பு, சீரகக் குழம்பு, பூண்டுக் குழம்பு, இஞ்சிக் குழம்பு, சுக்குக் குழம்பு போன்ற மருந்தாகும் 30 குழம்புகளைச் செய்யும் முறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அரிசிச் சாதத்திற்கே மட்டுமல்லாமல் கம்பு, வரகு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவிற்கும் துணை உணவாக உட்கொள்ள ஏற்றவை இந்தக் குழம்புகள். மிளகு, சீரகம், ஓமம், கடுகு, வெந்தயம் போன்ற அஞ்சறைப் பெட்டியின் மசாலாப் பொருட்கள் தரும் மருத்துவப் பலன்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தாளிப்பு வடாகம், காய்கறி வற்றல், தீபாவளி மருந்து, அஷ்டவர்க்கச் சூரணம், மருந்துப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும் முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவை தவிர, முதலுதவிக் குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் போன்றவையும் தரப்பட்டுள்ளன. -முனைவர் இராஜ. பன்னிருகைவடி வேலன். நன்றி: தினமலர், 29/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *