சப்தங்கள்

சப்தங்கள், மலையாளம் வைக்கம் பஷீர், தமிழில் குளச்சல் மு. யூசப், காலச்சுவடு பதிப்பகம்.

நம்பினால் இருக்கிறான் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000000462.html மலையாளத்தில் வைக்கம் பஷீர் எழுதி, தமிழில் குளச்சல் மு. யூசப் மொழிபெயர்த்த, சப்தங்கள் என்ற குறுநாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நடைபாதை இருளில் சந்திக்கும் ஒருவரோடு, வைக்கம் பஷீர் நடத்தும் உரையாடலை, ஒருவர் கதையாக சொல்வதுதான் இந்த நாவல். இருளில் சந்திக்கும் அந்த நபர், ஒரு ராணுவ வீரன். அவரது வாழ்க்கை, காதல் பற்றி கதை நீள்கிறது. இந்த நாவலின் எழுத்து நடையும், பஷீரின் கிண்டல், நையாண்டியும் மிக முக்கியமானவை. தமிழ் மொழியின் தாக்கம் உள்ள பல மலையாள வார்த்தைகளை, அவர் பயன்படுத்தி இருப்பது, மொழியைத் தாண்டி ஒரு உணர்வை படிப்பவருக்கு ஏற்படுத்துகிறது. பலர் போற்றும் எழுத்தாளராக உயர்ந்துவிட்ட நிலையில், இலக்கணத்தைக் கற்று, அதன் கீழ் எழுதலாமே என, பஷீரிடம் அவர் சகோதரர் கேட்கும்போது, ஒரு ஜோடி கண், கை, கால் இருப்பதால் யானையை, சர்ச்சிலின் மகள் என சொல்லிவிடுவார்களா என, நகைச்சுவையாக கேட்கிறார். தன்னுடைய மகளுக்கு, எளிதாக புரியும் மொழியில் எழுதும்போது, மொழிக்கான இலக்கணங்கள் அவசியமில்லை என்பதே, பஷீரின் கருத்து. மதசகிப்புத் தன்மைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பஷீரின் வாழ்வியல் முறையும் முக்கியமாகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் தேசாந்திரியாக திரிந்தவர். கங்கைக் கரையில் துறவியாகவும், இஸ்லாமிய முறையில் பாடல்களைப் பாடித் திரியும், ‘சூபி’ யாகவும் இருந்தவர். அவரது கனவில், திருச்சூர் வடக்கு நாதர் வந்ததாகவும், அவர், ‘பழுத்த பாக்கு வேண்டும்’ என கேட்டதால், அதை வாங்கி, கோவிலுக்குள் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. ‘பிரபஞ்சம் நாம் விரும்பிய படி இல்லை. கடவுள் விரும்பியபடியே செயல்படுகிறது. எனவே, நம்பியோருக்கு அவன் இருக்கிறான்’ என, இந்த நாவலின் உரையாடலின்போது, பஷீர் கூறுகிறார். தான் சார்ந்த மதத்தையோ, பிற மதத்தையோ தூக்கிப் பிடிக்கவும் இல்லை. தூற்றவும் இல்லை. பஷீரின் அணுகுமுறை இப்போதைய சூழலில் மிக அவசியம். -கவிஞர் சாரா. நன்றி: தினமலர், 29/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *