யாதுமாகி
யாதுமாகி, எம்.ஏ. சுசீலா, வம்சி புக்ஸ், பக். 208, விலை 180ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024356.html தேவி என்ற தனித்துவம் கெண்ட பெண், தனக்கான பாதையை தானே வகுத்து, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார். அவரது வாழ்வை வரலாறுபோல் அளிக்கிறார் அவர் மகள் சாரு. இந்த நூல் தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது. குழந்தைமணமும், பெண் கல்வி மறுப்பும் இன்று அருகிப்போன பிரச்னைகளாக இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இல்லை. பால்ய விவாகத்தில் விதவையாகிப் போனவர் தேவி. எதிர்ப்புகளை மீறி, தேவியின் தந்தை அவளைப் படிக்க வைக்கிறார். ‘இந்த உலகத்தை ஜெயிக்க, நம்ம கையிலே கிடைச்சிருக்கிற ஒரே ஒரு ஆயுதம், இந்தப் படிப்பு மட்டும்தான். அதை ஆதாரமா வச்சு இன்னும் பலதையும் தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தவற விட்டுட்டு ஒதுங்கிப் போயிடக்கூடாது’ என்று தேவிக்கு அறிவுரை சொல்கிறார், ஆங்கிலப் பேராசிரியர் மீனாட்சி. நாவலாசிரியரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாதவையாவின் மகள் தான் மீனாட்சி. தேவி படித்து முன்னேறி சமூக அந்தஸ்தை எட்டுகிறாள். மறுமணம் செய்து கொள்கிறாள். குழந்தை விதைவைகளுக்காகக் குரல் கொடுத்த சகோதரி சுப்புலட்சுமி அம்மாவையும் நாவலில் உலவ விடுகிறார் ஆசிரியை. இந்தப் புதினம் ஒரு சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. -எஸ்.குரு. நன்றி: தினமலர், 29/11/2015.