சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், தமிழில் மங்களம் சுந்தரேசன், மணிமேகலை பிரசுரம், விலை 185ரூ.

மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சினிமா ஏற்படுத்தி உள்ள தாக்கம் மிகப்பெரியது. அந்த தாக்கம், தமிழகத்தின் சமூக, பண்பாடு, பொருளாதார, அரசியல் என பல்வேறு தளங்களில் விரிவடைந்துள்ளது. அதை விவரிக்கிறது இந்த நூல். சிறுவர்களிடம் தமிழ் சினிமா ஏற்படுத்திய தாக்கம்தான் தலைப்பு. ஆனால் தலையை சுற்றி மூக்கை தொடுவதுபோல், சமூகத்தின் பல்வேறு படிநிலைகளுக்கு சென்று வந்த பிறகு, சிறுவர்களிடம் வருகிறது நூல். பெரும்பாலும், வீதிச் சிறுவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமான பத்திகளில் மட்டுமே விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இதில் ஆய்வு நடையே பின்பற்றப்பட்டுள்ளதால், வார்த்தைகள் அனைத்தும் கறாராகி, வாசகனின் மனதில் மந்த தன்மையை ஏற்படுத்துகிறது. எந்த தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது என்பது குறித்தோ, அது தொடர்பானவையோ நூலில் இல்லை. உலக அளவில் கவனிக்கப்பட்ட குழந்தைகள் சினிமாவையும், தமிழில் எடுக்கப்பட்ட குழந்தைகள் சினிமாவையும் ஒப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். -அ.ப.இராசா. நன்றி: தினமலர், 29/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *