சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், மணிமேகலைப் பிரசுரம், விலை 185ரூ. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். சமூகத்தின் மீது சினிமா தாக்கம் ஏற்படுத்துவதையும், குறிப்பாக (வீதி) சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பெரிய நாயகம் ஜேசுதாஸ் எழுதியுள்ளார். சினிமா மூலம் கற்றுக்கொள்கின்ற சாதகமான நிலையையும், கலாச்சார சீரழிவு என்ற பாதகமான நிலையையும் அலசி ஆராய்ந்துள்ளார். நற்பயனளிக்கக் கூடிய கற்றல் சூழ்நிலையைச் சிறுவர்களுக்கு கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பதை முடிவாகக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், தமிழில் மங்களம் சுந்தரேசன், மணிமேகலை பிரசுரம், விலை 185ரூ. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சினிமா ஏற்படுத்தி உள்ள தாக்கம் மிகப்பெரியது. அந்த தாக்கம், தமிழகத்தின் சமூக, பண்பாடு, பொருளாதார, அரசியல் என பல்வேறு தளங்களில் விரிவடைந்துள்ளது. அதை விவரிக்கிறது இந்த நூல். சிறுவர்களிடம் தமிழ் சினிமா ஏற்படுத்திய தாக்கம்தான் தலைப்பு. ஆனால் தலையை சுற்றி மூக்கை தொடுவதுபோல், சமூகத்தின் பல்வேறு படிநிலைகளுக்கு சென்று வந்த பிறகு, சிறுவர்களிடம் வருகிறது நூல். பெரும்பாலும், வீதிச் சிறுவர்களே […]

Read more