நீவாநதி
நீவாநதி, கவிப்பித்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 502, விலை 385ரூ.
பொன்னை ஆற்றின் நுரைத்து ஓடிய வெள்ளத்தோடும் அதில் துள்ளிக் குதித்த மீன்களோடும் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டதுமட்டுமல்ல, அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் வாழப் பழகிக் கொண்ட கொடுமையை அவர்களின் மொழியிலேயே ‘நீவாநதி’ என்ற தலைப்பில் நாவலாக்கித் தந்துள்ளார் கவிப்பித்தன். வேலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைதான் நாவலின் மைய இழை. அவர்களின் உயிர் ஆதாரமாக இருந்த நீவாநதி எனும் பொன்னை ஆறு ஆந்திர அரசு கட்டிய குறுக்கணையாலும் தனியார் தொழிற்சாலைக் கழிவுகளாலும், நிலம் கையகப்படுத்தப்பட்டதாலும் அழித்து எடுக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை படிக்கப் படிக்க கண்ணிரை வரவழைக்கிறது. வட்டார மொழியில் பொன்னை ஆற்றின் தொண்டை வறண்ட சோகத்தை நம்மோடும் பகிரும் நாவல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 16/11/2015.