ஈமம்

ஈமம், கவிப்பித்தன், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.440. வடஆர்க்காட்டின் நிலமொழியை அடையாளமாகக் கொண்ட கவிப்பித்தனின் ‘நீவாநதி’, ‘மடவளி’ நாவல்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள மூன்றாவது நாவல் ‘ஈமம்’. விஷம் குடித்து இறந்துபோனதாகக் கருதிய ஒருவன், உடற்கூறாய்வுக்கு முன்னர் பிழைத்துக்கொள்கிறான். அவனை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் மையச்சரடு. நாவலின் இந்த உள்ளடக்கம் புதியது; வியப்புக்குரியது. நாவல் தரும் வெளிச்சத்தில் மனிதத்திரளின் மேன்மைகள் நொறுங்கி வீழ்வதை வாசகர்கள் உணரலாம். கணவன், மனைவிக்கு இடையிலான சாதாரண பிரச்சினைக்காக விஷம் குடிக்கிறான் மகேந்திரன். இது தெரிந்த சுசீலா, ஆறு […]

Read more

நீவாநதி

நீவாநதி, கவிப்பித்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 502, விலை 385ரூ. பொன்னை ஆற்றின் நுரைத்து ஓடிய வெள்ளத்தோடும் அதில் துள்ளிக் குதித்த மீன்களோடும் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டதுமட்டுமல்ல, அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் வாழப் பழகிக் கொண்ட கொடுமையை அவர்களின் மொழியிலேயே ‘நீவாநதி’ என்ற தலைப்பில் நாவலாக்கித் தந்துள்ளார் கவிப்பித்தன். வேலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைதான் நாவலின் மைய இழை. அவர்களின் உயிர் ஆதாரமாக இருந்த நீவாநதி எனும் பொன்னை ஆறு ஆந்திர அரசு கட்டிய குறுக்கணையாலும் […]

Read more

பிணங்களின் கதை

பிணங்களின் கதை, கவிப்பித்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 160, விலை 120ரூ. நாம் வாழும் சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் விழுமியங்கள் நவீனம் என்ற பெயரில் இப்போது மெதுவாகச் சிதைக்கப்படுவது நம்மில் எத்தனை பேர்? ஆனால், தொண்டை மண்டலத்தில் பிறந்த நூலாசிரியர், தனது இந்தச் சிறுகதை நூலின் மூலம் தாம் பிறந்த மண் பாரம்பரியத்தை இழந்து வருவது குறித்து கனத்த இதயத்துடன் ஆதங்கப்பட்டுள்ளார். புதுமை என்ற பெயரில் எப்படி எல்லாம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்? இதனால், […]

Read more