ஈமம்

ஈமம், கவிப்பித்தன், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.440. வடஆர்க்காட்டின் நிலமொழியை அடையாளமாகக் கொண்ட கவிப்பித்தனின் ‘நீவாநதி’, ‘மடவளி’ நாவல்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள மூன்றாவது நாவல் ‘ஈமம்’. விஷம் குடித்து இறந்துபோனதாகக் கருதிய ஒருவன், உடற்கூறாய்வுக்கு முன்னர் பிழைத்துக்கொள்கிறான். அவனை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் மையச்சரடு. நாவலின் இந்த உள்ளடக்கம் புதியது; வியப்புக்குரியது. நாவல் தரும் வெளிச்சத்தில் மனிதத்திரளின் மேன்மைகள் நொறுங்கி வீழ்வதை வாசகர்கள் உணரலாம். கணவன், மனைவிக்கு இடையிலான சாதாரண பிரச்சினைக்காக விஷம் குடிக்கிறான் மகேந்திரன். இது தெரிந்த சுசீலா, ஆறு […]

Read more

பத்து இரவுகளின் கனவுகள்

பத்து இரவுகளின் கனவுகள், நாட்சுமே சொசெகி, தமிழில்: கே.கணேஷ்ராம், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.150. நாட்சுமே சொசெகி: கனவுகளைத் தியானிக்கும் எழுத்து கனவின் மாயத்துடன் புனைவுகளை உருவாக்குவதில் வெற்றிபெற்ற வெகு சிலரில் போர்ஹேஸும் ஒருவர். ‘நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை, முந்தைய கனவொன்றில் விழித்திருக்கிறீர்கள், அந்தக் கனவு இன்னொரு கனவுக்குள் இருக்கிறது, அது இன்னொரு கனவுக்குள், இப்படியே முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது…’ என்று ‘கடவுளின் எழுத்து’ கதையில் எழுதியிருப்பார். கனவை இலக்கியமாக்குவதில் போர்ஹேஸுக்கும் முன்னோடி ஜப்பானின் மிக முக்கியமான நவீனப் படைப்பாளிகளுள் ஒருவரான நாட்சுமே சொசெகி (1867-1916). […]

Read more

மணல்

மணல், பா.செயப்பிரகாசம், நூல்வனம் வெளியீடு,  விலை: ரூ.210. பா.செயப்பிரகாசம் எழுதிய ‘மணல்’ நாவல், சமகால அரசியலைப் பேசுகிறது. ‘மணல்’ என்ற எளிமையான தலைப்பே அதன் கதையையும் அரசியலையும் சொல்லிவிடும். இயற்கையின் சமீபத்திய படைப்பான மனிதன் எப்படித் தன்னுடைய சுயநல உறுபசிக்குப் பெற்ற அன்னையைப் பிய்த்துத் தின்கிறான் என்பதையும், உலகெங்கும் உள்ள இயற்கையின் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதில் மனிதன் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும், முதலாளிகளின் கொள்ளை லாபவேட்டைக் களமாக மக்களின் உழைப்பு மட்டுமல்ல; இயற்கையின் மார்பில் ரத்தம் வரும் வரை உறிஞ்சிக் குடிக்கிற வெறித்தனத்தையும் […]

Read more

சுமையா

சுமையா, கனவுப் பிரியன், நூல்வனம் வெளியீடு, பக். 216, விலை 160ரூ. சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுகதைகள் வாயிலாக புதிய கதைக்களன்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளார். வாழ்வின் விசித்திரங்கள் கதைகளின் வழி காட்சிப்படுத்தும் விதம் சுவாரஸ்யம். சமூகம், அறிவியல் புனைவுகளும் கலந்து உற்சாகப்படுத்துகிறது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more