மஞ்சள் முத்தம்
மஞ்சள் முத்தம், அ.ரோஸ்லின், அகநாழிகை பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ஒரு அமைதியின் இருப்பைக்கூட அர்த்தப்படுத்தி கவிதையாக்கும் திறன் கவிஞருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறது. உதாரணமாக, இருளைத் தின்றிருந்த இரவை குத்திக் கிழிக்கும் வன்மம் நம்மையும் புளகாங்கிதமடையச் செய்கிறது. அதில் பிரியங்கள் எப்படி அந்நியப்பட்டுப்போகின்றன என்பதை காட்சிப்படுத்தும் முயற்சி புரிகிறது. ‘சதைகளின் சந்தையில், ஆட்டிறைச்சியைவிட விலை மலிவாகியிருக்கிறது, பெண்களுடையது’ -என்ற சமூகநீதிக்கான சாடல்கள் உக்கிரம் கொள்கின்றன. ஆனால் இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கின்றன வாசகனுக்கெழுதப்பட்ட கடிதங்கள் என்ற நிலையிலேயே மொத்த கவிதைகளும் வார்த்தைகளால் அடுக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றன. […]
Read more