பிரியமுடன் ஒரு பிரளயம்
பிரியமுடன் ஒரு பிரளயம் (லார்கோ த்ரில்லர்), முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ.
காமிக்ஸ் உலகின் ஜோம்ஸ்பாண்ட் குழுமத்தின் தலைவன், லார்கோ கலக்கும் காதல் மணக்கும் அதிரடி திரில்லர். சந்திக்கும் பெண்கள் பலரும் வீசும் காதல் வலைகளில் இருந்து தப்பித்து, இளம்பெண் ஒருத்தியின் அழகில் சிக்குகிறான் லார்கோ.
அவளது அன்புக்குப் பின்னால், தீவிரவாதிகளின் சதி என்ற அபாயம் ஒளிந்திருப்பது தெரியாமலே அவளை நேசிக்கிறான். பயங்கரவாதத்தின் பல்வேறு முனைத் தாக்குதல்கள், லார்கோ சந்திக்கும் சவால்கள், ஒட்டுமொத்தமாக அவனது குழுவையே அழிக்க செய்யப்படும் சதி என மிரட்டலாய் நகர்கிறது கதை.
இருமுனைத் தாக்குதல்களில் இருந்து லார்கோ தப்பித்தானா? இல்லையா? ‘ஜில்’ காதல் கவர்ச்சி ப்ளஸ் ‘த்ரில்’ சதி, சண்டை கலவையிலான கலக்கல் காமிக்ஸ்!.
நன்றி: குமுதம், 13/6/2018
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026850.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818