பழி வாங்கும் பாவை
பழி வாங்கும் பாவை, மேக்ஸி லயன் காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ.
நிறவெறியின் உச்சத்தில இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கர்னல் அர்லிங்டன், அப்பாவி செவ்விந்திய கிராம மக்களை யுத்த தர்மத்தை மீறிக் கொன்று தீர்க்கிறார். நியாயத்தின் பக்கமே எப்போதும் நிற்கும் டெக்ஸ் வில்லர், செவ்விந்தியர்களுக்குத் துணையாக இருந்து, அமெரிக்க ராணுவக் கோட்டையைத் தகர்க்க வழி சொல்கிறார்.
செவ்விந்தியத் தலைவன் ப்ளாக் புல்லின் மனைவியோ கர்னலைப் பழிவாங்கத் துடிக்கிறாள். திகல், திருப்பம், திட்டமிடல் என்று மிரட்டலாக வண்ணச் சித்திரங்களுடன் கண்முன் காட்சியாக நகர்கிறது கதை. காமிக்ஸ் பிரியர்களின் கொண்டாட்டத்துக்குக் கிடைத்திருக்கும் அதிரடிப் புத்தகம்.
நன்றி: குமுதம், 23/10/19 .
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818