நமக்குள் சில கேள்விகள்
நமக்குள் சில கேள்விகள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 224, விலை 160ரூ.
அறிவு உள்ள யாவரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எத்தகைய கேள்வி கேட்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரையும் தனிப்படுத்திக் காட்டுகிறது. பயனுள்ள பதிலுக்கான கேள்வியைக் கேட்பவரது அறிவு முதிர்ச்சி அடைகிறது.
அத்தகைய நூற்றுக்கணக்கான கேள்விகளை தமக்குத் தாமே கேட்டு, அதற்கான விடைகளையும் தாமே தேடியும் சிந்தித்தும் தொகுத்திருக்கிறார் இறையன்பு. வாசிக்க வாசிக்க நமக்குள் எழும் பல கேள்வி முடிச்சுகள் சிக்கல் பிரிந்து அவிழ்கிறது. அதன் விளைவாக அறிவில் மலர்ச்சி முகிழ்கிறது.
பல நூல்களைப் படித்துத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஒரே புத்தகத்தில் கிடைப்பது சிறப்பு.
நன்றி: குமுதம்இ 23/10/19 .
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818