தொடர்கதைகளும் முற்றும்
தொடர்கதைகளும் முற்றும், வெ.ஆத்மநாதன், மணிமேகலை பிரசுரம், பக். 160, விலை 80ரூ.
இந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம்.
இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தகம் படித்த உணர்வு ஏற்படவில்லை.
மாறாக, நமக்கு தெரிந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அதிலும், புத்தகத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் வரும் மீனாட்சி கதாபாத்திரம், நெஞ்சில் நிழலாடுவதாக அமைந்துள்ளது. அனைவராலும் விரும்பி படிக்கும் எளிய நுால் என்ற பாராட்டிற்குரியது.
– ச.சுப்பு
நன்றி: தினமலர், 13/10/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818