பிச்சிப் பூ
பிச்சிப் பூ, பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.70.
பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார்.
குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் காட்சிப்படுத்தி நிறைவு செய்துள்ளார். நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கிலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.
அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியது. விறுவிறுப்பு அதிகம். நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் நிலவிய கொடுமைகளைத் தோல் உரித்துக் காட்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 12/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818